ஜோதிடம் கேளுங்கள்

என் வேலைவாய்ப்பு மற்றும் திருமணம் பற்றி சொல்லுங்கள். – கண்ணன், சென்னை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் கண்ணன் அவர்களே !

21 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சுவாதி. ராசி துலாம்.லக்னம் கும்பம். தங்களின் ஜாதகத்தில், செவ்வாய் தன் உச்ச வீடான மேஷத்தில் உள்ளதால், தங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தாங்கள் கும்ப லக்னத்தை சேர்ந்தவர் ஆதலால், திருமணம் செய்யும் போது, அனுசரித்து செல்லும் குணமுடைய பெண்ணை திருமணம் செய்து கொண்டால், தங்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். தங்களின் மனம் போல், வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

************

எனது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் மற்றும் எனது படிப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி குறிப்பிடுக. எனது எதிர்கால செல்வ நிலை, சிறந்த தொழில் பற்றிக் கூறவும். எனது ராசி என்ன என்றும் சொல்லவும். – ரிஸ்மின் நிஃபாஜூடீன், இலங்கை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ரிஸ்மின் நிஃப்பாஜுடீன் அவர்களே !

தாங்கள் பிறந்த நேரத்தை கொடுக்கவில்லை. அன்றைய தினம், பூசம், ஆயில்யம் ஆகிய இரு ந்ட்சத்திரங்கள் வருகின்றன. தங்களின் ராசி கடகம் ஆகும். தங்களின் ஜாதகப்படி, ராசியிலிருந்து கேந்திரங்களில், ராகு, கேது இருப்பதால், தங்களின் எதிர்காலம் மற்றும் படிப்பு நன்றாக இருக்கும். குரு 8-ல் உள்ளதால்,செல்வ வளம் படிப்படியாகத்தான் முன்னேற்றத்தைக் கொண்டு வரும். கற்பனை வளமும், பொது மக்கள் தொடர்பும் உடைய தொழில் துறைகள் தங்களுக்கு உகந்ததாக இருக்கும்.

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

****************

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author