ஜோதிடம் கேளுங்கள்

நான் வெளிநாடு செல்ல பல முயற்சிகள் செய்தும் தடை ஏற்படுகிறது.  இந்த ஆண்டுக்குள் நான் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா? – வி. சந்திரசேகரன், இலங்கை

அன்பு நிலாச்சாரல் வாசகர் சந்திரசேகர் அவர்களே !

34 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திராடம், ராசி மகரம், தங்களின் லக்னமும் மகரம் ஆகும். தங்களின் ஜாதகப்படி,இந்த ஆண்டு இறுதிக்குள் தாங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லும் முயற்சியில் உள்ள காரியத்தடை விலக சதுர்த்தி வரும் நாள் முதல் தாங்கள் தினமும், மஞ்சளினால் செய்த பிள்ளையாருக்கு அருகம் புல் கொண்டு அர்ச்சனை செய்து வரவும். தாங்கள் விரும்பியவாறு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்ட, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

                                                                  ***************************

என்னுடைய நட்சத்திரம், ராசி என்ன? என் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்? எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா ? – கண்மணிரோஜா, பாண்டிச்சேரி.
அன்பு நிலாச்சாரல் வாசகி கண்மணிரோஜா அவர்களே !

28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் விசாகம், ராசி துலாம், லக்னம் துலாம் ஆகும். தங்களின் கணவர் சற்றே
முன்கோபக்காரராக இருந்தாலும், நல்ல பணியில் இருப்பார். கல்வியைக் குறிக்கும் கிரகமான புதன் நல்ல இடத்தில் இருப்பதால், குழந்தைக்கு நல்ல படிப்பு உண்டு. தங்களின் ஜாதகப்படி சனி லக்னத்தில் இருந்து 10-ம் வீட்டைப் பார்ப்பதால், அரசு அல்லது அரசு சார்ந்த பணி கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளது. நல்ல வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

                                                                  ***************************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author