ஜோதிடம் கேளுங்கள்

எனக்குத் திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன. எனது கணவருக்கும் எனது அண்ணனுக்கும் உள்ள கருத்து வேறுபாட்டினால் எங்கள் இரு குடும்பத்துக்கிடையே போக்குவரத்து இல்லை. இது எப்போது சரியாகும்? – புவனேஸ்வரி, அருப்புக்கோட்டை

அன்பு நிலாச்சாரல் வாசகி புவனேஸ்வரி அவர்களே!
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூராடம், ராசி தனுசு, லக்னம் மேஷம் ஆகும். குடும்ப உறவுகளைக் குறிக்கும் சுக்கிரன் 9-ம் இடத்தில் இருப்பதால், வெள்ளிக்கிழமை தோறும் திருமகளை வழிபட்டுவாருங்கள். கருத்து வேறூபாடுகள் தானே மறைந்து விடும். மீண்டும் சுமூகமான உறவு மலர, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

******

மேல் படிப்பு படிக்க வெளிநாடு செல்ல முடியுமா? திருமணம் எப்போது நடக்கும்? இனிமையான மணவாழ்க்கை அமையுமா? – கே. பிரவீணா, நாமக்கல்

அன்பு நிலாச்சாரல் வாசகி பிரவீணா அவர்களே!
23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசிரீஷம், ராசி ரிஷபம், லக்னம் மகரம் ஆகும். தாங்கள் மேல் படிப்புக்காக வெளிநாடு செல்லலாம். தங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் இருக்கும் குரு சந்திரனைப் பார்ப்பதால், தங்களுக்கு திருமணம் 2011-ல் நடைபெறும். தங்களுக்கு குழந்தை பாக்யமும் உண்டு. குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால், தங்கள் கணவர் நல்ல குணவானாக இருப்பார். நல்ல வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

******

எனக்கு நல்ல வேலை எப்போது அமையும்? எப்போதும் குடும்பத்தில் பண நெருக்கடி இருக்கிறது. மேலும் ஒரு பெண் என்னை விரும்புவதாகக் கூறுகிறாள். என் திருமணம் பற்றியும் கூறவும். – வி.விஜயன், திருச்சி

அன்பு நிலாச்சாரல் வாசகர் விஜயன் அவர்களே!
22 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஆயில்யம். ராசி கடகம், லக்னம் மகரம் ஆகும். தங்களுக்கு எழரை சனி முடிந்து விட்டதால் இனி வளமான காலம்தான். இந்த ஆண்டு இறுதிக்குள் தாங்கள் நல்ல வேலையில் அமர்வீர்கள். பண நெருக்கடி தீர, தட்சிணாமூர்த்தியை வியாழன் தோறும் வழிபட்டு வாருங்கள். பெற்றோர் மூலம் அமையும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

************************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author