ஜோதிடம் கேளுங்கள்

திருமணம் எப்போது அமையும்? – T. முருகானந்தம், பொள்ளாச்சி.

அன்பு நிலாச்சாரல் வாசகர் முருகானந்தம் அவர்களே !

36 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம்.லக்னம் விருச்சிகம். தங்களின் ராசியிலிருந்து, குரு 2-ம் இடத்தில் இருப்பதால், மே மாதம் 2012 க்குள் தங்களின் திருமணம் கைக்கூடி விடும். தங்களின் எண்ணம் நிறைவேற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

********************

எனக்கு எப்பொழுது நிரந்தர வேலை கிடைக்கும்? கணிணித்துறையில் எனக்கு விருப்பம் அதிகம். மென்பொருள் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைக்குமா? – கார்த்திகேயன், பேராவூரணி.

அன்பு நிலாச்சாரல் வாசகர் கார்த்திக் அவர்களே !

25 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திரட்டாதி, ராசி மீனம், லக்னம் மிதுனம். தங்களின் ஜாதகத்தில், வளங்களை அள்ளித் தரும் குரு பகவான், 11-ம் இடத்தில் இருப்பதால், 2012 , ஜனவரி மாதத்திற்குள் தங்களுக்கு நிரந்தர பணி கிடைக்கும். சற்று போராட்டத்திற்கு பின்னே, தங்களுக்குப் பிடித்தமான மென்பொருள் துறையில், வேலை கிடைக்கும். தங்களுக்கு வளமான வாழ்க்கை அமையவும் நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

********************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author