பூச நட்சத்திரம், கடக ராசியில் பிறந்த இவருடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா? இவர் எப்படிப்பட்ட மணமகனை திருமணம் செய்யலாம் என்பதைத் தெரிவிக்கவும். – கௌசல்யா, பரமத்தி வேலூர்.
வாசகி கௌசல்யா அவர்களே !
இந்த ஜாதகத்தில் செவ்வாய்,, லக்னத்திலிருந்து 8-ம் இடத்தில் இருந்தாலும், குருவின் வீட்டில் இருப்பதால், செவ்வாய் தோஷம் இல்லை என்பதை அறியவும். இவர் சிம்ம லக்னத்தை சேர்ந்தவராதலால், அனுசரித்து செல்லும் குணமுடைய மணமகனை திருமணம் செய்தால், வாழ்க்கை நன்றாக இருக்கும்.
திருமணம் எப்பொழுது நடக்கும்? காதல் திருமணமா? என் காதல் நிறைவேறுமா? – சாவித்ரி, ராமச்சந்திரபுரம்.
அன்பு நிலாச்சாரல் வாசகி சாவித்ரி அவர்களே !
23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சதயம், ராசி கும்பம், லக்னம் மிதுனம். தங்களின் ஜாதகப்படி காதல் திருமணம் கை கூடுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
“


