ஜோதிடம் கேளுங்கள்

என்னுடய வேலையில் சம்பளம் மிகக் குறைவு. நான் என் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாறலாம் என்றிருக்கிறேன். நல்ல வேலை கிடைக்குமா? – ஜாஹீர் ஹுசைன், முக்கோணமலைப்பட்டி, புதுக்கோட்டை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ஜாஹிர் உசைன் அவர்களே!
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அசுவினி , ராசி மேஷம், லக்னம் மிதுனம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் கோசார சனி நன்மை தரும் 6-ம் இடத்திற்கு செப்டம்பர் மாதம் செல்ல இருக்கிறார். இதற்குப் பிறகு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தங்கள் விருப்பம் போல நல்ல வேலை கிடைக்க நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*****

நான் கோடீஸ்வரனாக ஆவதற்கு வழி இருக்கிறதா? லாட்டரியில் அதிர்ஷ்டம் கிடைக்குமா? – அருண், கிருஷ்ணகிரி.

அன்பு நிலாச்சாரல் வாசகர் அருண் அவர்களே!
30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அவிட்டம் , ராசி மகரம், லக்னம் கடகம் ஆகும். தங்களின் ஜாதகத்தில், லக்னத்தில் இருக்கும் குரு சனியின் சாரத்தில் இருப்பதால், லாட்டரி போன்றவற்றில் பணம் உடனடியாக கைக்கு கிடைப்பது என்பது கடினம். எனவே, அதில் அதிக பணம் முடக்க வேண்டாம். உங்களின் உழைப்பே உங்கள் பொருளாதார தரத்தை உயர்த்தும். வளமான எதிர்காலம் அமைவதற்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*****

எப்பொழுது எனக்குத் திருமணம் நடக்கும்? தொழிலில் வேறு நிலைமை மோசமாக இருக்கிறது – ஆர். வெங்கடேஷ், கும்பகோணம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் வெங்கடேஷ் அவர்களே!
37 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசிரீஷம், ராசி மிதுனம், லக்னம் கன்னி ஆகும். தங்களின் ஜாதகத்தில் 5-ல் ராகுவும், 11-ல் கேதுவும் இருப்பதால், தாங்கள் வெள்ளிக்கிழமை தோறும் நாக தேவதையை வழிபட்டு வாருங்கள். இந்த ஆண்டு குரு பகவான் தங்கள் ராசியிலிருந்து 9-ம் இடத்திற்கு போவதால், திருமணம், வியாபார விருத்தி ஆகிய இரண்டையும் அளிப்பார். வியாபார வளம் பெறுவதற்கும், திருமண பாக்கியம் பெறுவதற்கும் நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

************************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author