ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா? எப்போது திருமணம் நடக்கும்? குழந்தை பாக்கியம் உண்டா? அல்லது குழந்தை பிறப்பதில் ஏதேனும் பிரச்சினைகள் வருமா..? ராஜேந்திரன், சென்னை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ராஜேந்திரன் அவர்களே !

27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரோகிணி, ராசி ரிஷபம், லக்னம் ரிஷபம். தங்கள் ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் தன் சொந்த வீடான விருச்சிகத்தில் இருப்பதாலும், மேலும் அவர் சனியின் 3ம் பார்வையைப் பெறுவதாலும் உங்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை. திருமணம் இந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு கை கூடும். புத்திர பாக்கியம் உண்டு. நல்ல மண வாழ்வு அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

********

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? பாகப்பிரியா, திருச்சி

அன்பு நிலாச்சாரல் வாசகி பாகப்பிரியா அவர்களே !

20 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மூலம். ராசி தனுசு. லக்னம் கும்பம். மூல நட்சத்திரத்தின் அதிபதியாக விளங்குபவர் கேது. அவர் ஞான காரகர் என்பதால் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் அறிவின் துணைகொண்டு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வர். தங்களின் ஜாதகப்படி, எதிர்காலம் வளமாக இருக்கும். சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

********

பதில் அளித்தவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author