ஜோதிடம் கேளுங்கள்

வேலை எப்போது கிடைக்கும்? வாகன பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டா? – கோபாலகிருஷ்ணன், திருநெல்வேலி.

அன்பு நிலாச்சாரல் வாசகர் கோபாலகிருஷ்ணன் அவர்களே !

20 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரோகிணி, ராசி ரிஷபம், லக்னம் தனுசு. மே 2012, குரு பகவான், தங்கள் லக்னத்திலிருந்து 6-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு மாறி, ஓராண்டு அங்கு தங்குகிறார். இந்தக் காலக் கட்டத்திற்குள் தங்களுக்கு வேலை கிடைத்து விடும். தங்களின் ஜாதகப்படி, போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தங்களுக்கு நல்ல வேலை கிடைக்க, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

எனக்கு நல்ல வேலை எப்போது கிடைக்கும்? திருமண வாழ்வு எப்போது அமையும்? – எஸ். மகேந்திரன், ஈரோடு.

அன்பு நிலாச்சாரல் வாசகர் மகேந்திரன் அவர்களே !

30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மகம், ராசி சிம்மம் லக்னம் கடகம். தங்களின் ஜாதகப்படி சந்திர திசை ராகு புக்தி, 25.08.2012 வரை நடைபெறுகிறது. திங்கட்கிழமை தோறும், பார்வதி அம்மனை வழிபட்டு வாருங்கள். நல்ல வேலையில் அமர்வீர்கள். அதற்குப்பிறகு, 6 மாதத்திற்குள் திருமணமும் கைக்கூடிவிடும். நல்ல வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

About The Author