பாபா பதில்கள் – தீதும் நன்றும் பிறர் தர வாரா

தீதும் நன்றும் பிறர் தர வாரா

திரு. சிவ சங்கர் பாபா அவர்களின் உரையிலிருந்து,

ஜுரம் என்பது என்ன? 98.40 மேல உடம்பு heat ஆயிடுச்சுன்னா அதற்கு பெயர் ஜுரம். ஜுரம் தானாக வந்து தானாக போய்விடும். அதற்கு 3 நாள் 6 நாள் என்று கணக்கு இருக்கிறது. தானாகதான், போகும். மாத்திரை எதற்காக போடுகிறோம். அந்த sufferingஐ கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்று.

அந்த மாதிரி கர்மா தானாக வந்த மாதிரி தானாக போய்விடும். நீ எதுவும் செய்யத் தேவை இல்லை. இந்த உலகத்தில் எந்த கஷ்டமும் தீர்க்க முடியாத கஷ்டம் கிடையாது. Problemனு இருந்தா அதற்கு ஒரு solution உண்டு. அந்த problemம் சரி solutionம் சரி, உன் கையில் கிடையாது. நடக்க வேண்டியது நடந்தே தீரும். அதை வேடிக்கை பார்க்கணும் அவ்வளவுதான். வேடிக்கை பார்க்கிற பக்குவத்தை வளர்த்துக் கொள்வதற்குத்தான் இந்த கோயில், குளம் எல்லாம். ஒருத்தன் குடை வாங்கிவிட்டான் என்றால், எவ்வளவு வெயில் இருந்தாலும், எவ்வளவு மழை பெய்தாலும், குடை பிடித்துக் கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம். குடை இல்லாதவன் மழை நிக்கட்டும் என்று யார் வீட்டுத் திண்ணையிலாவது உட்கார்ந்து கொண்டிருப்பான். What is the guarantee that the rain will stop? இன்னும் கூட அதிகமாக மழை பெய்ய ஆரம்பிக்கலாம். அப்ப, குடை இருக்கிறவன் அதை பத்தி கவலைப்படத் தேவையில்லை. அந்த மாதிரி நீ ஒரு குடை வாங்கிடணும். கடவுள் என்கிற குடை வாங்கிவிட்டால் கஷ்டம் என்கிற வெயில் உன்னை தகிக்காது. கஷ்டம் என்கிற மழை உன்னை நனைக்காது. cool ஆக இந்த உலகத்தை நீ face பண்ணலாம்.

Goddessஎல்லாரிடமும் சாமியிருக்கிறது. சாமி இல்லாத ஆளே கிடையாது. யாரையும் சாமி punishபண்றதும் இல்லை, reward பண்றதும் இல்லை. உன்னுடைய செயல்களுடைய விளைவுகளை நீ அனுபவிக்கிறாய். ஒரு விவசாயி என்ன விதை போடறானோ அது விளையும். நீ நல்லது செய்தால் உனக்கு நல்லது வரும். கெட்டது செய்தால் கெட்டது வரும். தீதும் நன்றும் பிறர் தர வாரா.

கடவுள் எல்லாவற்றையும் கடந்து உனக்குள் இருக்கிற வஸ்து. He is just guiding you. ‘இதை செய், இதை செய்யாதே’ என்று உனக்குள் இருந்து ஒரு குரல் கேட்கும். அந்த குரல்தான் கடவுள். நீ அதற்கு against ஆக revolt பண்ணக் கூடாது. அது என்ன சொல்லுதோ அதை அப்படியே follow பண்ணினால் சந்தோஷமாக இருப்பாய். ஆனால் நீ அதை silence பண்ணிவிட்டு உன்னுடைய moodக்கு ஏற்ற மாதிரி twist பண்ணி வாழ்ந்தாயானால் துக்கம் வரும். Most of you land up with guilty conscience whenever you revolt against the dictum of the Consciousness. உன்னுடைய மனசாட்சியை மீறி ஏதாவது செய்தால் உனக்கு துக்கம் வரும். அந்த குரலை அப்படியே follow செய்தால் குஷியாக இருப்பாய். இவ்வளவுதான் வாழ்க்கை.

My message to anyone is live in the present. Don’t bother about tomorrow. If you take care of today, tomorrow will be taken care of. You missed yesterday because you were worrying about the day before yesterday. Don’t worry about the past. Don’t worry about whatever went wrong in your life. You take care of the present; that is enough. The future is the logical result.

About The Author