பாபா பதில்கள்-நிஜமான சன்னியாசி

நிஜமான சன்னியாசி

ஒரு ஆள் சன்னியாசியா இல்லையான்னு அவனுக்குத் தான் தெரியும். இன்னொருவன் என்ன அவனுக்கு சர்டிபிகேட் கொடுக்கிறது? ரன்னிங் ரேஸிலேயோ அல்லது லாங் ஜம்பிலேயோ கொடுக்கிற மாதிரியா அது! ஒரு ஆள் உள்ளே அயோக்கியனா இருந்துகிட்டு வெளியே வேஷம் கட்டலாம். இன்னொன்று வெளியே ஜாலியா இருந்துகிட்டு உள்ளே சன்னியாசியாக, ஆசா பாசங்களைக் கடந்த நிலையில் இருக்கலாம். இதை ஒரு மூன்றாவது மனுஷனால எந்தக்காலத்திலும் கண்டு பிடிக்கவே முடியாது. இதுதான் நிஜம். "தன்னெஞ்சறிவது பொய்யற்க" – அவனுக்குத்தான் தெரியும். "பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்". எனதுரை தனதுரையாக, நான் உரைக்கும் வார்த்தை என் நாயகன் உரைக்கும் வார்த்தை. The real purpose of any prophet is to spread love and give more values to life than ruling the people. They are not politicians. They have come as Spokesmen of God.

நம் கண் எதிரிலே கொட்டிக் கிடக்க வேண்டும், ஆனால் அதிலே மனது போகக்கூடாது, To have and not wanting to have – அதுதான் ஞானத்தினுடைய உயர்நிலை, அந்தப் பக்குவம் ஞானிக்குத் தான் வரமுடியும்,

நிஜமான சன்னியாசி, நிஜமான யோகியா நீ ஆகணும்னா என்ன பண்ணணும்? செயலைத் துறக்கக்கூடாது.You should perform. That performance should be beyond your personal affairs. உலக க்ஷேமத்துக்காக எதிலும் அட்டாச்மென்ட் இல்லாமல் கடமையைச் செய்தால் அதுதான் நிஜசன்னியாசம்.

ஆன்மீகம்

ஆன்மீகம் என்பது வாழ்க்கைக்கு வெளியில் தேடுகிற விஷயம் என்று எல்லாரும் பரவலாக தப்பு அபிப்பிராயம் வைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆன்மீகம் என்பது வாழ்க்கைக்கு உள்ளே தேட வேண்டிய விஷயம். ஏதோ ஒரு ஜோசியம், குறி, தகடு, மோதிரம், சொல்லிக்கிட்டு இருக்கிற ஆளை ஆன்மீகவாதின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. நான் அப்படிச் சொல்லலை. ஒரு நல்ல டாக்டர், ஒரு நல்ல என்ஜினியர், ஒரு நல்ல ஆசிரியர், ஒரு நல்ல வக்கீல், ஒரு நல்ல பத்திரிகையாளர் எல்லாரும் ஆன்மீகவாதியே. தொல்லுலக மக்கள் எல்லாம் ஒன்றே என்னும் தாயுள்ளம் தனியுள்ளம் தனிலன்றோ இன்பம்! இன்பம்! என்று பாரதிதாசன் சொல்வார். இந்த உலகத்தில் உள்ள எல்லார்கிட்டேயும் அந்த இறைவன் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டு, இந்த உலகத்தில் நாம் பார்க்கிற எல்லா கேரக்டரையும் அந்த கடவுளுடைய ஒரு வடிவமாக பார்த்துக் கொண்டு, எல்லார்கிட்டேயும் அந்த இறைத்தன்மையை பகிர்ந்து கொண்டு ஒத்த கருத்தோடு கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என்று சொல்வது தான் ஆன்மீகம். அழகாக உழைக்கக் கற்றுக்கொள். குறைவாகப் பேசு. நிறையப் பார். நிறையக் கேள். அப்போது நீ உருப்பட்டுவிடுவாய். Take this as my tips for success. Believe in God. Believe in yourself. Don’t waste your time in anything which will not give self-confidence. உனக்கு தன்னம்பிக்கை கொடுக்காத எந்த விஷயத்திலும் தலை வைச்சுக்கூடப் படுக்காதே. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள். அப்போது வாழ்க்கையில் தலை நிமிர்ந்து நிற்பாய்.

About The Author