பாபா பதில்கள்

நீயும் கடவுளே

உங்களுக்கென்று ஒரு ஊர் இருக்கிறது. நீங்கள் வேறு வேலையாக வெளியூர் போகிறீர்கள், அங்கே வேலை முடிந்தவுடன் சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்று தோன்றுகிறது இல்லையா? அந்த மாதிரி பூமி என்பது நாம் வந்திருக்கிற இடம், இந்த பூமியில் சில விஷயங்கள் நமக்கு நடக்க வேண்டும். அதை எல்லாம் பார்த்து முடித்தபின் நாம் போக வேண்டிய இடம் இருக்கிறது இல்லையா. சொந்த ஊர், அதுதான் கைலாசம், அதுதான் வைகுண்டம், பூமி என்பது நீ பராக்கு பார்க்க வந்திருக்கிற ‘தீவுத் திடல்’ மாதிரி. 

கம்பளிப்பூச்சி பட்டாம்பூச்சியாக உருமாறுவதற்கு தடையாக இருப்பது அதனுடைய ரோமங்கள். அந்தத் தடையை உடைத்துக் கொண்டு அது அழகான பட்டாம்பூச்சியாக உருவாகிறது. அந்த மாதிரி உனக்கு வாழ்க்கையில் வருகிற தடைகளை எதிர்கொண்டு, அவைகளை உடைத்து நீயும் அழகான பட்டாம்பூச்சி போல் மாறிவிடு. இந்த உலகத்தையும் அழகு மயமாக மாற்றி விடலாம். நீ உனக்கென கட்டியிருக்கும் மாயச்சிறையிலிருந்து மீளும்போதுதான் நீயும் கடவுளே என்று உணர்வாய்.

About The Author