1…2…3…4…

வணக்கம்..

அய்யோ! இது எக்ஸர்சைஸ் ஸ்டெப் எல்லாம் இல்லீங்க. இந்தத் தீபாவளிக்கு நான் செஞ்ச ஸ்வீட்! ஏன் போன தீபாவளிக்கே எழுதியிருக்கலாம்ல்ல – என்று கேட்பவர்கள் அருகில் வாருங்கள். விஷயத்தை காதோரம் சொல்கிறேன்.. “எல்லாரும் சாப்பிட்டுப் பார்த்து நல்லாருக்குன்னு சொன்னாதானே எந்தப் பயமும் இல்லாமல் எழுதலாம். அதுக்குத்தான்..” என்ன சொல்றீங்க?…

தீபாவளி முடிஞ்சதும் என் கணவர் அவங்க ஆபீஸ் ஸ்டாஃப்புக்கெல்லாம் வீட்ல செஞ்ச இந்த ஸ்வீட்ட எடுத்துட்டுப் போனார். ஆபீஸ்லேர்ந்து ஃபோன் மேல ஃபோன். எல்லாம் பாராட்டு மழைதாங்க. நான் ஸ்வீட் கொடுத்த எல்லார்கிட்ட இருந்தும் நல்ல ரிசல்ட் வந்ததால, உங்களுக்கும் இந்த கேக் செய்முறையைச் சொல்லலாம்னு ஒரு முடிவெடுத்தேன்… நீங்களும் இதை பாலோ பண்ணி இந்த கேக்கை வீட்டில் தயாரித்து எல்லார்கிட்டேயும் பாராட்டைப் பெறலாமே…. செய்முறையைச் எனக்குச் சொல்லிக் கொடுத்த என் சித்திக்கு நன்றி!!!

தேவையான பொருட்கள் :

பால் 4 கப்
சர்க்கரை 3 கப்
தேங்காய் 2 கப்
நெய் 1 கப்

செய்முறை :

நெய்யைத் தவிர மற்ற மூன்றையும் கலந்து, அடி கனமான ஒரு பாத்திரத்தில் (ப்ரஷர் பேன் பாட்டத்திலும்) வைத்துக் கிளறவும். கலவை பாதி வெந்ததும்(கெட்டியானதும்) சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்துக் கிளறவும். கலவை நன்கு கெட்டியானதும் (கரண்டியில் கிளறும்போது பாத்திரத்தின் அடியில் கலவை ஒட்டாமல் வரும்) ஒரு பெரிய நெய் தடவிய ஒரு ப்ளேட்டில் கொட்ட வேண்டும். அரைமணி முதல் முக்கால் மணி நேரம் கழித்துச் சூடு ஆறியவுடன் (வெதுவெதுப்பான சூட்டில்) விரும்பியவாறு துண்டுகளாக வெட்டி எடுத்து இஷ்டம்போல சாப்பிடலாம்.. சுவைக்க சுவைக்க இனிக்கும்..!

About The Author

1 Comment

Comments are closed.