ஆரோக்கியம் உங்கள் விரல்களில்! (1)

முத்ரா என்ற வடமொழிச் சொல்லிற்கு ‘குறியீட்டு வெளிப்பாடு’ என்று பொருள் கூறலாம். தமிழில் ‘முத்திரை’ என்று கூறுவர். பழங்கால இந்தியாவில் இக்குறியீடுகள் சிற்பங்கள் மூலமாகவும், நாட்டியத்தின் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டன. இன்னும் சொல்லப் போனால் வார்த்தைகளால் வெளியிட முடியாத உணர்வுகள் கூட முத்திரைகள் மூலம் வெளிப்பட்டன.

சொலவடை ஒன்றைக் கேட்டிருப்போம். ‘ஐந்து விரலும் ஒரே மாதிரி இருக்கா!’

இல்லைதான். வடிவத்திலும் சரி, அவற்றின் குணத்திலும் சரி.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஐந்திற்கும் தனித் தனி சிறப்புகள் இருக்கின்றன. கை விரல்கள் ஐந்தும் பஞ்சபூதங்களின் பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்றன.

கட்டை விரல் – நெருப்பு
ஆள்காட்டி விரல் – காற்று
நடுவிரல் – ஆகாயம்
மோதிர விரல் – நிலம்
சுண்டு விரல் – நீர்

சரி, எதற்கு இந்த பீடிகை தெரியுமா?

குறிப்பிட்ட விரல்களை இணைத்து செய்யும் முத்திரைகள் மூலம் உடல் ஆரோக்கியம் பெறலாம் என்பதனை விளக்கவே இந்தக் கட்டுரை. முத்திரைகள் மிகுந்த சக்தி பெற்றவை. எனவே, இவற்றைத் தக்க முறைப்படி பயிற்சி செய்து வந்தால் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காண முடியும்.

நோயைப் போக்கி ஆரோக்கிய வாழ்விற்கு உதவும் சில முத்திரைகளைப் பற்றி பார்க்கலாம்.

முக்கியமான குறிப்பு :

1. ஞான முத்திரை

ஞானம் என்பது அறிவைக் குறிக்கும்.


செய்முறை:

உங்களுடைய ஆள்காட்டி விரலின் நுனி, கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நன்றாக விரிந்து நேராக இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்:

இம்முத்திரை அறிவு வளத்தை மேம்படுத்தும். கட்டை விரலின் நுனியில் உள்ள பல முக்கிய சுரப்பிகள், உங்கள் ஆள்காட்டி விரலால் அழுத்தி விடுவதனால் செயல்படத் தொடங்கி விடும்.

நேர அளவு:

இம்முத்திரையைச் செய்ய குறிப்பிட்ட நேர அளவு கிடையாது. இதனை நீங்கள் உட்கார்ந்திருக்கும்போதோ, நடக்கும்போதோ, படுத்திருக்கும்போதோஎப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும், உங்கள் தேவைக்குத் தக்கவாறு செய்யலாம்.

நன்மைகள்:

உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
உங்கள் மூளையைக் கூர்மையாக்கும்.
உங்கள் கவனத்தை அதிகரிக்கும்.

இதை நீங்கள் தினந்தோறும் செய்து வந்தால் தூக்கமின்மை குறைவதோடு மனநோய் மற்றும் மனச்சோர்வு குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

2. பிரித்வி முத்திரை

பிரித்வி என்பது பூமியைக் குறிக்கும்.

செய்முறை:

உங்களுடைய மோதிர விரலின் நுனியால், கட்டை விரலின் நுனியைத் தொடுங்கள். மற்ற மூன்று விரல்களும் விரிந்து நேராக இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்:

உடல் பலவீனத்தைக் குறைக்கும்.

நேர அளவு :

இதற்கும் குறிப்பிட்ட நேர அளவு கிடையாது. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நன்மைகள் :

உங்கள் தோலின் நிறத்தில் பளபளப்பையும் மினுமினுப்பையும் ஏற்படுத்தும்.
உங்கள் உடலை சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கச் செய்யும்.
நீங்கள் ஒல்லியாக இருந்தால் உங்கள் உடலின் எடை அதிகரிக்கச் செய்யும்.

(தொடரும்)

About The Author

5 Comments

  1. appayamma

    மிகவும் நன்ட்ரு.உபயொகமக உல்லது,னன்ட்ரி

  2. JEYARAMAN VEERAPPAN

    Sir
    I was doing daily practise,but today only in know this usage,really very useful for me

Comments are closed.