கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

அன்று முதல் இன்று வரை

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்களிலிருந்து இப்போது கணினியில் நிச்சயிக்கப்படும் கல்யாணங்கள் வரை காலம் எவ்வளவோ மாறி விட்டது. பழைய இலக்கியங்களில் திருமணங்களை எட்டு வகையாகப் பிரித்திருக்கிறார்களாம்.

பிரமம் : பிரம்மச்சாரியாக இருக்கும் வாலிபன் கன்னி ஒருத்தியைக் கைபிடிப்பதாகும்.

பிரசாபத்தியம் : மணமக்களின் பெற்றோர்கள் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்வது. மணமகனைப் பெற்றவர்கள் முறையாக பெண் வீட்டாரிடம் சென்று பேசி மணம் முடிப்பது.

ஆரிடம் : பசுக்கள் இரண்டை பெண் வீட்டாருக்குத் தானமாகக் கொடுத்து திருமணம் செய்து கொள்வது. சமயங்களில் இரண்டு எருதுகளுக்கு இடையில் மணமகளை நிறுத்தி அவள் மீது புனித நீர் தெளித்த பின்பு அவளை மணமகன் வீட்டாருக்கு அன்பளிப்பாக வழங்குவது.

தெய்வம் : தெய்வத்தின் சன்னிதியில் பெண்னை மணமகனுக்கு பரிசாக வழங்குதல்.

இந்த நான்கு முறை திருமணங்களும் அக்னியை சாட்சியாக முன்னிறுத்தி செய்யப்படும் திருமணங்கள் ஆகும்.

கந்தர்வம்: மணமகளும் மணமகனும் சந்தித்து, காதல் செய்து திருமண சடங்குகள் இல்லாமலேயே மற்றவர்களின் ஒப்புதல் பற்றிக் கவலைப்படாமலேயே இணைந்து வாழ்வது.
(Living together concept அப்போதே இருந்திருக்கிறது போல!)

ஆசுரம்: மணமகன் பெண்ணுக்கு நகைகளையும், அவளுடைய நண்பிகள் கேட்கின்ற பணத்தையும் கொடுத்து மணம் செய்து கொள்வது.

இராக்கதம் : பெண்ணுடைய விருப்பத்துடனேயோ அல்லது அவள் விருப்பம் இல்லாமலோ கடத்திச் சென்று பலவந்தமாக மணமுடித்தல். (இப்போது திரைப்படங்களில் சர்வசாதாரணமாக காண்கிறோமே.. அதுபோல! கடைசி நிமிடத்தில் ஹீரோ வரமாட்டார் போலிருக்கிறது!)

பைசாசம் : பெண் தூக்கத்தில் இருக்கும்போதோ அல்லது சுயநினைவில்லாமல் மயங்கி இருக்கும்போதோ பலவந்தமாகத் திருமணம் செய்து கொள்வது.

(கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிபோலாமா , ஓடிப்போய் கலயாணம்தான் கட்டிக்கிடலாமா __ இதில் எந்த வகை யென்று கேட்கிறார் திரு கல்யாண குமார்.)அரசாளும் முறைகளை ‘நாயகம்’ என்று நான்கு வகையாகப் பிரித்திருக்கிறார்கள் பண்டைய இலக்கியங்களில்.

ஸ்திரி நாயகம் : ஒரு பெண்ணின் தலைமையில் நடக்கும் அரசு

வால நாயகம்: வாரிசுக் குழந்தை அரசுரிமை பெறும்போது அந்தக் குழந்தையால் ஆளப்படுகிற அரசு

வெகு நாயகம். பலரது கூட்டுத் தலைமையில் அமையும் அரசு (கூட்டணி அரசு இதுதானோ!)

அனாயாகம்: யாருடைய முறையான தலைமையில்லாமல் அராஜகமாக நடக்கின்ற அரசாங்கம்.

(நன்றி : "தமிழ்க் கருவூலம்" – பி.சி. கணேசன்)

About The Author

2 Comments

  1. S.PARTHASARATHY

    அன்புடன்

    தயவுசெய்து எனக்கு கீரை வகைகளின் பட்டியல் கிடைக்குமா.

    பார்த்தசாரதி

  2. Dr.Balambal.V.

    எட்டு வகை திருமனம் வெடட்தில் இருக்கிரது, நொட் இன் Tஅமில் லிடெரடுரெ. Tகமிழில் கலவு மனம் & கர்பு மனம் தான் இருந்தது

Comments are closed.