குறுங்கவிதைகள் (1)

அந்தரத்தில்

புதையுண்டது பறவை!

கவிதை என்றனர்.

***

மரத்தில்

புதிதாய்ப் பூ!

இளம்பெண்

தற்கொலை…

***

போர் விமானங்கள்

மனிதர்களைச்

சுடுகின்றன.

பறவைகள்?

***

வடைமாலை

வாயுகுமாரன்

குருக்களுக்கு தினசரி

வாயுசூரணம்.

***

இப்படிக்கு ஃப்ராய்ட்

காமம் செப்பாது

காண ஏதுமில்லை.

***

மறைந்து தாக்க

நானே போதுமே

அட ராமா!”

About The Author