குறுங்கவிதைகள் (12)

பிணம் காத்திருந்தது

அலங்கரிக்கிறார்கள்

ஊர்தியை

*****

சாமியை நாடி

கோயில் வருகிறான்

வாசலில் பிச்சை

சாமியே என்கிறான்

*****

பலூன் ஊத

பள்ளமானது

வயிறு

*****

கந்தையானாலும்

கசக்கக் கசந்தேன்

கிழிஞ்சிப் போகும் அல்லவா?

*****

ராஜாவேசமாம்

ஆசையாய்ப் போனான்

ராஜாவாய் ஊருக்குள்

மாறுவேசம் மனுசவேசம்

******

About The Author

1 Comment

  1. manisen37

    மிகவும் சிறப்பான சிந்தனைகள் வாழ்த்துக்கள்….நேர்த்தியான வார்த்தை கட்டமைப்பு………….. மாமதயானை

Comments are closed.