குறுங்கவிதைகள்(3)

பகலில்லை

இரவும் இல்லை

அந்திப் பொழுதே

நிரந்தரம்.

****

களவும் கற்று

மறக்க மறந்தவன்

பள்ளிப்பாடம்

கற்க மறுத்தவன்.

****

நாலுந் தெரிந்தவன்

ஐந்தில்

வளையாதவன்.

****

மூளைப் புழு

சுமந்து திரிகிறான்…

தொத்து வியாதிக்காரன்.

****

தாலியறுத்தவள்

தூக்கில் தொங்கினாள்.

தூக்குக்கயிறும்

அறுந்தது.

****

பெண்ணுரிமைக்காரி

ஆணாதிக்கவாதியை

வயிற்றில்

ஏற்றாள் சிறை.”

About The Author