கூறாதது கூறல் (1)

பாலம் கட்டினால் மனிதன்

இறங்கிக் குளித்தால்

கவிஞன்

*****

பீத்தல் குடையும்

பீய்ந்த செருப்புமாய்க்

கிளம்பி விட்டார்

கணக்கு வாத்தியார்

டியூஷன் எடுக்க

எந்தக் கணக்குக்கும்

கட்டுப் படாமல்

பெருமழையாய்ப் பெருகுகிறது

வாழ்க்கை

*******

About The Author