கோங்கூரா (அ) புளிச்ச கீரை துவையல்

தேவையான பொருட்கள்:

புளிக்கீரை – ஒரு கட்டு
பச்சை மிளகாய் – 6
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
எள்ளெண்ணெய் – 3 மேசைக் கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி .

செய்முறை:

1.கீரையை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கவும்.
2.பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு எல்லாம் சேர்த்து இடித்துக் கொள்ளவும்.
3.எள்ளெண்ணெயை சூடாக்கி கடுகை வெடிக்கவிட்டுக் கீரையை நன்றாக வதக்கவும். சில நிமிடங்களில் வதங்கி விடும்.
4.இடித்த விழுதைச் சேர்த்துக் கிளறி ஐந்து நிமிடங்கள் கழித்து எடுத்து வைக்கவும்.

இந்த துவையலை சாதத்துடனும் சாப்பிடலாம் இட்லி, தோசை, சப்பாத்தி, bread போன்றவற்றுடனும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

About The Author