சினி சிப்ஸ் – கொறிக்க, சுவைக்க (11)

கலக்கப்போவது யாரு?

கிண்டலுக்கும் லொள்ளுக்கும் பெயர்போன பார்த்திபனும் சத்யராஜும் ‘விடாக்கண்டன் கொடாக்கண்டன்’ என்ற புதிய படத்தில் இணைகிறார்கள். தாராளமான நகைச்சுவையோடு அனைத்து தரப்பினருக்கும் திருப்தியளிக்கும் படமாக இது இருக்கும் என்று இயக்குனர் செல்வபாரதி கூறியுள்ளார்.

*****

குசேலனில் தலெர் மெஹந்தி

குசேலனின் இந்த வாரப் புது வரவு ஹிந்தி பாப் புகழ் தலெர் மெஹந்தி. ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள "பேரின்பப் பேச்சுக்காரன்" பாடலை அவர் பாடுகிறார்.

*****

இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஜாக்குவார்

புகழ்பெற்ற சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கத்தின் மகன் விஜய் சிரஞ்சீவி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சூரியா’. தந்தையே படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். படத்தில் வரும் ஒரு காட்சிக்கு முறையாகப் பயிற்சி பெற்ற 10000 கராத்தே மற்றும் 200 குங்பூ மாஸ்டர்கள் பங்குபெறுவது படத்தின் ஹைலைட்.

*****

பத்திரிக்கையாளர்களாகும் நடிகைகள்

விஷாலுடன் இணைந்து நடிக்கும் ‘சத்யம்’ படத்தில் நயன்தாராவும், அர்ஜூன் நடிக்கும் ‘துரை’யில் கதாநாயகி கீரத்தும் பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

*****

கலைஞரை பிரமிக்க வைத்த கமல்

‘தசாவதாரம்’ பாடல் ட்ரெய்லரைப் பார்த்த முதல்வர் கருணாநிதி கமலஹாசனை கட்டியணைத்துப் பாராட்டியுள்ளார். கமல் பத்து வேடத்தில் நடித்துள்ளது பிரமிக்க வைப்பதாகவும் தெரிவித்துள்ளார் முதல்வர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஏப்ரல் 25ஆம் தேதி மிகப் பெரிய அளவில் நடைபெற்றது.

*****

‘படியுங்கோ!’ வலியுறுத்தும் ஸ்டார்கள்

கல்வியின் அவசியத்தை வலியுறுத்த நடிகர்கள் மேல் நம் மக்களுக்கு இருக்கும் அபிமானத்தை பயன்படுத்த எண்ணியிருக்கிறது தமிழக அரசு. இது தொடர்பாக, விஜய், சூர்யா, மாதவன் போன்ற முன்னணி நடிகர்கள் தோன்றும் டாகுமெண்ட்ரி படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.

*****

காசிக்குச் செல்லும் கடவுள்

‘நான் கடவுள்’ படத்தின் ஆர்யா, பூஜா சம்பந்தமான காட்சிகளைப் படமாக்க காசி செல்கின்றனர். படத்தின் கிளைமேக்ஸை காசியில் படமாக்க உள்ளனர். படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

*****

தமிழில் மீண்டும் சக்கரவர்த்தி

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், நயன்தாரா நடிக்கும் படம் ‘சர்வம்’. இப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் சக்கரவர்த்தி நடிக்கிறார். படத்தின் இசையமைப்பாளராக யுவன்சங்கர் ராஜாவும், ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும் பணியாற்றுகின்றனர்.

*****

About The Author