நழுவாத நம்பிக்கைகள்!

நீண்ட நாட்களுக்குப் பிறகு..
செல்போனில் வந்துவிட்ட
நண்பனின் முகம் தேடி
நினைவினில் பிடித்தேன்!

தேவையின் பொருட்டே
கழியும் வாழ்க்கையில்
அவனுக்கான தேவையை
தேடிக் கொண்டிருந்தேன்
வார்த்தைளுக்கு இடையே..!

அவனும் சொல்லாமலும்..
என்னாலும் முடியாமலும்..

வார்த்தைகளின் வலைகளை
வீசிக்கொண்டே போக..
எதுவும் சிக்காமல்
காற்றாய்ச் சுழன்றது நட்பு!

சின்ன ஏமாற்றமுடனும்
பெரிய மகிழ்ச்சியுடனும்எந்த கோரிக்கையுமில்லாமல்
முடிந்து போன பேச்சுக்கிடையே
இழையோடிய மெளனத்தின்
ஆழத்தில் துளிர்த்த மலர்ச்சியானதுமெளனம் ஏந்தும் காற்றைப் போல…
காதலை ஏந்தும் மனதைப் போல..
கருவை ஏந்தும் வயிற்றைப் போல..
உயிரை ஏந்தும் காலத்தைப் போல..கைகளில் ஏந்திக் கொண்டது –
நழுவிப் போய்க்கொண்டிருக்கும்
உறவுகளின் மீதான நம்பிக்கைகளை..!

About The Author

3 Comments

  1. viji

    எஅப்பொதோ தொலய்த்தவை கன் எதெரய்

Comments are closed.