இராசிபலன்கள் (27-10-2008 முதல் 2-11-2008 வரை)

மேஷம் :-

மேஷ ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் கவனமுடன் இருக்கவும். தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் வந்து நீங்கும்.
அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் இல்லை. பொருளாதார நெருக்கடி தீர்வதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் நல்ல பலனைத் தரும். விபரீதமான எண்ணங்களால் வீண் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் கவனம் தேவை. கமிஷன், தரகு, ஏஜன்சி சம்பந்தமான தொழிற் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். தொலை தூரப் பயணங்களில் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களிலும் மற்றும் நண்பர்களிடமும் பணம் ஏமாறாமல் இருக்கவும். புதிய தொழில்கள் ஆரம்பம் செய்ய நினைப்பதைச் சற்றுத் தள்ளிப் போடவும்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம் :-

ரிஷப ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். வங்கிகள் மூலமாக எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பச் சொத்துக்கள் சம்பந்தமாகிய பிரச்சனைகள் ஒரு நல்ல சாதகமான முடிவுக்கு வரும். மாணவர்கள் கல்வியில் நன்மதிப்பைப் பெறுவார்கள். கண், காதுகளில் நோய் ஏற்பட்டு விலகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். திருட்டுப் போன பொருட்கள் திரும்பக் கை வந்து சேரும். குலதெய்வ வழிபாட்டிற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். தாயின் உடல் நிலையில் சற்று கவனமுடன் இருத்தல் நல்லது. பொதுநலக் காரியங்களில் தலையிட்டு மன நிம்மதி அடையக் கூடிய காலமாகும். சொந்த பந்தங்களாலும், நண்பர்களாலும் எதிர்பாராத பணச் செலவுகள் உண்டாகும்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

மிதுனம் :-

மிதுன ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் சிறிது கால தாமதம் ஏற்படும். மற்றவர் விஷயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழுக்க நேரும் என்பதால் கவனமுடன் இருக்கவும். எதிர்பாராமல் புதிய வீடு, நிலம் போன்றவை கை வந்து சேரும். செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர் ஏற்படலாம். சகோதரர்களால் சில நன்மைகள் ஏற்படும். தந்தையின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். நண்பர்கள் மற்றும் விருந்தினர் வருகையால் மன நிம்மதியும் பொருள் வரவும் உண்டாகும். கம்ப்யூட்டர், மின்சாதனப் பொருள் வியாபாரிகள், பேராசிரியர்கள், விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள் நல்ல பலன் அடைவார்கள்.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- அம்மன் வழிபாடு செய்து வரவும்.

கடகம் :-

கடக ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். தீர்த்த யாத்திரை செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
ஆடம்பர அலங்காரப் பொருட்கள், கட்டில், மெத்தை போன்ற வியாபாரிகள், தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் லாபம் அடைவார்கள். காதல் விஷயங்களில் கவனமுடன் இருத்தல் நல்லது. புதிய முறை மருத்துவத்தின் மூலம் நோய்களில் இருந்து விடுதலை பெறக் கூடிய காலமாகும். நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வந்த அரசு வழக்கு தீர்வதற்கு சற்றுக் காலதாமதம் ஆகலாம். புதிய தொழில் தொடங்குவது சம்பந்தமான முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பங்காளிகளால் ஆதாயம் இல்லை. பொருளாதாரம் சுமாராக இருக்கும். யாத்திரையில் கவனம் தேவை.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.

சிம்மம் :-

சிம்ம ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். பங்காளிகளால் பொருள் நட்டமும் மன சஞ்சலமும் ஏற்படும். குலதெய்வ வழிபாடு செய்து வருவதால் மனக் குறைகள் தீரும். அநாதை ஆசிரமங்கள், ஆலயப் பணி புரிவோர்கள், பொதுநலத் தொண்டு நிறுவனத்தவர்கள், இரும்பு, எண்ணை சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைய வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத ஆதாயங்கள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும், பரிசு, பாராட்டுதல்களையும் பெறுவார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. வாகனங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்யவும்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

கன்னி :-

கன்னி ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். கோர்ட் வழக்கு மற்றும் சொத்து சம்பந்தமான விசயங்களில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். வேற்று மதத்தவரால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். வங்கிகளின் மூலமாக எதிர்பார்த்த கடன்கள் நண்பர்களின் உதவியால் கிடைக்கும். சகோதர சகோதரிகளால் வீண் பொருள் விரையமும் எதிர்ப்புகளும் உருவாகும். மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை. ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் பணம் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப் பண விரையம் ஏற்படலாம். குடும்பத்தில் காரணமற்ற பிரச்சனைகள் உருவாகி அதனால் மன நிம்மதி குறையும். உத்தியோகத் துறையினர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்படலாம்.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- சிவ வழிபாடு செய்து வரவும்.

துலாம் :-

துலாம் ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். புதிய நில புலன்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பலசரக்கு, எண்ணை, இரும்பு, இயந்திரம், கமிஷன், தரகு, விதை வித்துக்கள், தானியங்கள் போன்ற வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள். அரசு அலுவலக விஷயங்களில் பொறுமையைக் கையாளவும். நெருப்பு, மின்சாரம் ஆகியவற்றில் கவனமுடன் இருக்கவும். வீடுகளைப் பழுது பார்க்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொலைதூரப் பயணங்களில் சாதகமான நல்ல செய்திகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான காரியங்களில் இருந்து வந்த மன சஞ்சலம் குறைந்து நிம்மதி அடையலாம். புதிய கூட்டுத் தொழில் ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளில் வெற்றி உண்டாகும். மனைவியால் தனவரவு உண்டு.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- செவ்வாய்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- முருகன் வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம் :-

விருச்சிக ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். குழந்தை இல்லாதவர்களுக்கு இறையருளால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்தகம், பேனா, பென்சில் அச்சுத் தொழில், இணைய தளங்கள் போன்ற தொழிற் செய்வோர்கள் லாபம் பெறுவார்கள். உடம்பில் இரத்தம் மற்றும் நரம்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். வீடுகளில் கவனமுடன் இருந்த்தால் திருடு
போவதைத் தவிர்க்கலாம். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் வம்புகளை விலைக்கு வாங்காதீர்கள். லாட்டரி போன்ற விஷயத்தில் பணம் ஏமாறாதீர்கள். தீராத பழமையான நோய்களுக்கு புதிய மருத்துவர்களின் தொடர்பால் நோய்கள் நீங்கும். விருந்தினர்களின் வரவால் மனச் சந்தோஷமும் ஆதாயமும் அடைவீர்கள்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- அம்மன் மற்றும் ஆஞ்சனேயர் வழிபாடு செய்து வரவும்.

தநுசு :-

தநுசு ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் காரணமற்ற பிரச்சனைகள் வந்து நீங்கும். புதிய தொழில்கள் ஆரம்பம் செய்யலாம். தண்ணீர், கூல்டிரிங்ஸ்,
பழங்கள், பூ, இலை ஆகிய வியாபாரிகள் லாபம் அடைவார்கள். மஹான்களின் அருளாசிகள் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் சில லாபங்களை அடைவீர்கள். வீடு நிலம் சம்பந்தமாகிய விஷயங்களில் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். செய்தொழிலில் சம்பந்தம் இல்லாத நபர்களால் புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், கட்டிட சம்பந்தமான கன்ஸ்டிரக்ஷன் தொழில் செய்வோர்கள், கமிஷன் தொழிற் செய்பவர்கள் லாபம் பெறுவார்கள். சூதாட்டத்தில் பணம் பொருள் ஏமாறாமல் இருக்கவும். கண் காதுகளில் கவனமுடன் இருக்கவும்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- சிவ வழிபாடு செய்து வரவும்.

மகரம் :-

மகர ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். காணாமற் போன பொருட்கள் திரும்பி வீடு வந்து சேரும். வாகனங்களில் யாத்திரை செய்யும் போது மிகுந்த கவனமுடன் சென்று வந்தால் விபத்துக்களில் இருந்து விடுபடலாம். பெண்களால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். மற்றவருக்குப் பணம் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். தூரத்து நற்செய்திகளைக் கேட்பீர்கள். உடம்பில் வயிறு மற்றும் மூலம் ஆகிய பிணிகள் வந்து போகும். திருமணத் தகவல் மையங்கள், ஷேர் மார்க்கெட், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள் நல்ல பலனை அடைவார்கள். மற்றவர் விஷயத்தில் தலையிட்டு காவல்துறையின் தண்டனைக்கு ஆளாக வேண்டாம். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். நண்பர்களிடம்
எச்சரிக்கையாகப் பழகுதல் நல்லது.

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- பிதுர் வழிபாடு செய்து வரவும்.

கும்பம் :-

கும்ப ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரகமாகும். பங்காளிகளால் பொருள் நட்டம் ஏற்படும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். நீண்ட காலமாக இருந்து வந்த எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். விபரீதமான எண்ணங்களால் மனநிம்மதி குறையக் கூடும். புதிய கார் மற்றும் நில புலன்கள் வாங்க எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறக் கூடிய காலமாகும். மாமன் வழிச் சொந்த பந்தங்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். உடம்பில் நரம்பு, எலும்பு சம்பந்தமாகிய பிணிகள், வலிகள் வந்து போகும். திருமணம் போன்ற சுப காரியங்களில் சில எதிர்பாராத தடைகள் வந்து சேரும். தீர்த்த யாத்திரைகளைத் தள்ளிப் போடுதல் நல்லது. தாய்க்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். வீடுகளில் கவனமுடன் இருக்கவும்.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- கணபதி வழிபாடு செய்து வரவும்.

மீனம் :-

மீன ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். உணவுக் கூடங்கள், நெருப்பு போலீஸ், ராணுவம் கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழிற் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். காணாமற் போன பொருட்கள் திரும்பி வீடு வந்து சேரும். பிள்ளைகளின் மகிழ்ச்சிகளுக்காக உல்லாசப் பயணம் செல்லத் திட்டம் போடுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். பொது நலத் தொண்டு நிறுவனங்களுக்கும் மற்றும் ஆதரவற்ற ஏழைகளுக்கும் உதவி செய்து மன நிறைவடைவீர்கள். உறவினர்களின் வரவால் எதிர்பாராத பணச் செலவுகள் வந்து சேரும். தந்தையால் பொருள் வரவு உண்டாகும். சூதாட்டங்களில் ஏமாற்றம் அடைய வேண்டாம். எழுத்து, கணிதம், போன்ற துறை சார்ந்தவர்கள் மற்றும் வக்கீல் தொழிற் செய்வோர்கள் லாபம் பெறுவர். உத்தியோகத்தில் கவனம் தேவை.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

About The Author

1 Comment

  1. spuviraj

    எனது மகன் 28.10.2008. 5.28 மனிக்கு பிரந்தவர் அவருடய பலன் பெயர்வரி முன் எலுத்து பர்த்து சொல்லவும் நன்ரி

Comments are closed.