ஜோதிடம் கேளுங்கள்

எனது எதிர்காலம் எப்படி இருக்கும்..? எனது படிப்பு எப்படி அமையும்? நான் விரும்பிய படிப்பை படிக்க முடியுமா..? – என்.நந்தகிஷோர், கோயம்புத்தூர்

அன்பு நிலாச்சாரல் வாசகர் நந்தகிஷோர் அவர்களே !

15 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கேட்டை, ராசி விருச்சிகம், கடகம் . லக்னம் துலாம். தங்களின் ஜாதகத்தில் வளத்தைக் குறிக்கும் குரு லக்னத்தில் இருப்பதால் தங்களின் எதிர்காலம் நிச்சயம் நன்றாக இருக்கும். கல்விக்கு உரிய கிரகமான புதன் 11-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் தாங்கள் விரும்பிய படிப்பைப் படிக்க இயலும். சிறந்த கல்விச் செல்வத்தைப் பெற்று உயர்நிலையை அடைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

********

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ஆணுக்கு எந்த எழுத்தை முதலாவதாகக் கொண்டு பெயர் வைக்கலாம்…? – பாலகிருஷ்ணன், கோயம்புத்தூர்

அன்பு நிலாச்சாரல் வாசகர் பாலகிருஷ்ணன் அவர்களே !

திருவாதிரை நட்சத்திரம் 1,2,3,4 பாதங்களில் பிறந்த ஆணுக்கு கு-க-ஞ-ச என்ற எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு பெயர் வைக்கலாம்.

********

நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவர் என்னைவிட ஒரு வருடம் சிறியவர். எனக்கு மட்டும் செவ்வாய் தோஷம் உள்ளது. எங்கள் இருவரின் ஜாதிகளும் வேறு வேறு. எனது காதல் கைகூடுமா…? எனக்கு எப்போது திருமணம் நடக்கும்..? என் காதலரின் ராசி மிதுனம், நட்சத்திரம் புனர்பூசம். – மோகனப்பிரியா, பரமத்திவேலூர்

அன்பு நிலாச்சாரல் வாசகி மோகனப்பிரியா அவர்களே !

25 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரம். ராசி சிம்மம். லக்னம் கும்பம் . தங்களின் ஜாதகப்படி நீங்கள் உங்களைவிட வயது குறைந்தவரைவரை மணக்கும் வாய்ப்புக்கள் இல்லை. முக்கியமாக, தங்களின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை என்பதை நீங்கள் அறியவும். இந்தாண்டு இறுதிக்குள் தங்களின் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. தங்களுக்கு நல்லதொரு மண வாழ்வு அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
              

********

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

2 Comments

  1. Ilayaraja

    எனது பெயர் இளையராஜா. வயது 29. பிறந்த நாள்; 6/12/1984. ரிசப ராசி, கார்த்திகை நட்சத்திரம். தற்பொழுது எனது தொழில் எவ்வாறு இருக்கிறது? சொந்த தொழில் தொடஙகலாமா?

  2. prabahakar

    என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்னுடைய ராசி விருச்சிகம் நான் 10/07/1995 இரவு 10.05 நேரம் பிரந்தென்

Comments are closed.