ஜோதிடம் கேளுங்கள்

என் பெயர் ஜோசப் மாணிக்கம். நான் 19.03.83-இல், திருச்சியில், விடிகாலை 12.30-இற்குப் பிறந்தேன். என் ராசி மேஷம். நான் சொந்தத்திற்குள் திருமணம் செய்வேனா? அல்லது என் திருமணம் காதல் திருமணமாக அமையுமா? நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையிலிருந்து மாற்றலாகி வேறு வேலைக்குப் போகும் சாத்தியம் உண்டா? இருப்பின் எப்படிப் பட்ட வேலை அமையும்? ஜோசப் மாணிக்கம், திருச்சி.

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. ஜோசப் மாணிக்கம் அவர்களே!
25 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கார்த்திகை, ராசி மேஷம், லக்னம் மிதுனம். தங்களின் திருமணம் காதல் திருமணமாக நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இப்பொழுது உள்ள வேலையிலேயே இருக்கவும். டிசம்பர் 2009-க்குப்பிறகு தாங்கள் இப்பொழுது பார்க்கும் துறையிலேயே இன்னும் நல்ல பதவியில் அமர்வீர்கள்.

*****

எனது பெயர் S.சக்திவேல். நான் 27.12.1978-இல், காலை 11.30-இற்கு, ஈரோடில் பிறந்தேன். எனக்கு எப்போது திருமணம் நடக்கும் எனக் கணித்துக் கூறமுடியுமா? – S.சக்திவேல், ஈரோடு

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு.சக்திவேல் அவர்களே!
30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம், லக்னம் கும்பம். கோசாரா ரீதியாக குரு தங்களின் லக்னத்திற்கு மே மாதம் முதல் மாறி, தன்னுடைய 5, 7, 9-ம் பார்வைகளால் 5, 7, 9-ம் வீடுகளைப் பார்ப்பதால், திருமணம் ஆகஸ்ட் 2009-க்குள் கை கூடிவிடும். மேலும், வியாழன் தோறும் குரு பகவானைத் தரிசனம் செய்வதுடன், அவருக்குப் பிரியமான கொண்டைக் கடலையை நிவேதனம் செய்து வரவும். தங்களின் திருமணம் விரைவில் கைகூட நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*****

எனது மகனின் பெயர் தனுஷ்கர். அவர்் 2.9.2003-இல், கொழும்பில், அதிகாலை 5.29-இற்குப் பிறந்தார்அவரின் படிப்பு, எதிர்காலம் எப்படி இருக்கும்? – காயத்திரி, கொழும்பு

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு.தனுஷ்கர் அவர்களின் அன்னை அவர்களே!
5 வயது ஆகும் தங்களின் மகன் சிம்ம லக்னத்தையும், விருச்சிக ராசியையும் சேர்ந்தவர். தலைமை தாங்கும் பண்பும், சுதந்திரமான மனப்போக்கும் உடையவர். தன் மனத்துக்குப் பிடித்த காரியங்களை முழு மனதுடன் செய்வார். நல்ல கல்வி உண்டு. படிப்பு முதலியவற்றில் ஜாதகரைத் தட்டிக் கொடுத்தால், அவரின் திறமை நன்கு பரிமளிக்கும். லக்னத்தில் குரு அமர்ந்து கொண்டு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிர்காலம் வளமாக இருக்கும்.

*****

என் பெயர் G. சந்திரகாசு. நான் 1977.12.18-இல், அதிகாலை 5.10-இற்கு, கல்முனை எனும் ஊரில் பிறந்தேன். எனது ராசி மீனம், நட்சத்திரம் உத்தரட்டதி. எனக்கு வேலை கிடைக்குமா? அதற்கான பலன் உள்ளதா?
G.சந்திரகாசு

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. சந்திரகாசு அவர்களே!
31 வயதாகும் தங்களின் ராசி மீனம், நட்சத்திரம்- உத்திரட்டாதி, லக்னம் விருச்சிகம். தங்களுக்கு அரசு சார்ந்த அல்லது அரசின் பங்கு உடைய நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கான அமைப்பு உள்ளது. கோசார ரீதியாக குரு பகவான், டிசம்பர் 2009-ல் தங்களின் லக்னத்திலிருந்து 5-ம் இடத்திற்கு செல்லும் காலம் தங்களின் திருமணம் கை கூடும்.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

7 Comments

  1. akm

    neenga ellam thirunthavey maattingala? ellorum iththanai manikku poranthen nu time pottirukkengaley intha time yaaroda watchla ullathunnu solla mudiyuma?
    athaavathu intha time…..doctorudaiya,or nursudaiya,or ur father,brother,some relations….or that hospital watchla ulla time appadinu solla mudiyuma?
    antha time unmaiyana timeaa? yosingaya mothalla…

  2. Rishi

    ஏகேஎம்,
    உங்களுடைய கேள்வி மேலோட்டமானது. நீங்கள் ஜோதிடத்தை நம்புகிறீர்களோ, இல்லையோ; அது ரெண்டாவது. ஜோதிடப் பாடங்களைப் படித்திருந்தால் இந்தக் கேள்வி எழாது. ஒரு நாளைக்கு 60 நாழிகைகள் என்பது கணக்கு. ஒரு நாளைக்கு 12 லக்னங்கள் வரும். ஒவ்வொரு லக்னமும் ஐந்து நாழிகைக்கு ஒருமுறைதான் மாறும். அதாவது இரண்டு மணிநேரக் கணக்கு. ஐந்து நிமிடங்கள் முன்னப் பின்ன இருந்தால் பலன்களில் பெரிய மாற்றம் ஏதும் இராது. லக்னமே மாறினால்தான் சொல்லும் பலன்கள் மாறுபடும். உதாரணத்திற்கு காலை 8.10க்கு ஒரு குழந்தை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பஞ்சாங்கப் படி, 8.05க்கு லக்னம் மாறுவதாக வைத்துக்கொள்வோம். இதற்கு லக்ன சந்தித் திருத்தம் என்றொரு கணக்கு இருக்கிறது. இதன்படி கணக்கை நேர் செய்தால் ஜாதகம் மாறாது.

  3. AKM(ABDUL KHADER MOHIDEEN) vetriyur

    மன்னிக்கவும்…ரிஷி… யாரையும் புன்படுத்தும் என்னத்தில் சொல்லவில்லை.குதர்கமாக பேசுகிரேன் என நினைக்க வேன்டாம். இவ்வுலகத்தில் நேரத்தை உருவாகியவனே மனிதன் தான். அதே போல் கனிதத்தையும்,இதுவரைக்கும் கன்டுபிடிக்கப்பட்ட கோல்கலும், கோல்கலின் பெயர்கலும்(இன்னும் கன்டு பிடிக்க வேன்டியது நிரைய இருக்காம்…..!?). 1+1=2,4+8=12,…தான்கல் சொல்வது 12*5=60 இதே போல. அப்படி இருக்கும் போது நமது பூமிக்கருகில் உல்ல சில கோல்கலை மட்டும் எடுத்துக்கொன்டு கனிக்கிரேன் என்ரு சொல்வதெல்லாம் உபயோகமில்லாதது. இந்த பக்கத்தில் உல்ல வினாக்கலை பாருன்கல்.யாருக்காவது தன்னம்பிக்கை இருக்கா?…எனக்கு வேலை கிடைக்குமா,என் எதிகாலம் எப்படி இருக்கும்…இவர்கலுக்கு உன்கலால் முடிந்தால் தன்னம்பிக்கையை உன்டாக்கவும்.

  4. Rishi

    அன்பு ஏகேஎம்,
    தங்களது நேரத்தை ஒதுக்கி கருத்துக்களை பரிமாறுவதற்கு மிக்க நன்றி.

    //நேரத்தை உருவாகியவனே மனிதன் தான். அதே போல் கனிதத்தையும்,இதுவரைக்கும் கன்டுபிடிக்கப்பட்ட கோல்கலும், கோல்கலின் பெயர்கலும்(இன்னும் கன்டு பிடிக்க வேன்டியது நிரைய இருக்காம்…..!?). 1+1=2,4+8=12,…தான்கல் சொல்வது 12*5=60 இதே போல. அப்படி இருக்கும் போது நமது பூமிக்கருகில் உல்ல சில கோல்கலை மட்டும் எடுத்துக்கொன்டு கனிக்கிரேன் என்ரு சொல்வதெல்லாம் உபயோகமில்லாதது.//

    சில விஷயங்களின் மூலாதாரம் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதோ, அல்லது நம் புலன்களுக்கு எட்டாததாகவோ இருக்கிறது. அந்த சிலவற்றுள் ஒன்றுதான் ஜோதிடம். ஜோதிடத்தில் உள்ள வானவியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அறிவியல்; அதையே சில சிக்கலான கணக்குகளுக்கு உட்படுத்தி மக்களின் வாழ்க்கையை / விதிக்கப்பட்ட விதியை அதில் காண முடியும் என்பது கலை. இந்தக் கலையின் மூலாதாரம் நம் பண்டைக்கால ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் ஆவர். அவர்கள் எழுதிச் சென்றதை நாம் அப்படியேக் கடைபிடிக்கிறோம். இதில் இடைச்செருகல்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. சுமாராக மூவாயிரம் வருட காலமாக ஒரு கலை அழியாமல் (அதன் வடிவத்தில் சிதைவுற்றாலும்!) இன்றளவும் இருக்கிறதென்றால் அதில் ஏதோ இல்லாமல் இல்லை! நடைமுறையில் பார்த்த வரை என்னால் பல விஷயங்களை நம்ப முடிகிறது. அதே நேரத்தில் சிலவற்றை நம்ப முடியவில்லை. அதை விளக்கிச் சொல்ல ஒரு பின்னூட்டப் பெட்டி பத்தாது. என்னைப் பொறுத்தவரை ஜோதிடம் பொய்யல்ல; ஆனால் அதில் கரைகண்ட அறிஞர்கள் மிகச் சிலரே!! மற்றவர்கள் குறிப்பிட்ட பாட வகுப்புகளைத் தாண்டியவர்கள், அவ்வளவுதான்!

    //இந்த பக்கத்தில் உல்ல வினாக்கலை பாருன்கல்.யாருக்காவது தன்னம்பிக்கை இருக்கா?…எனக்கு வேலை கிடைக்குமா,என் எதிகாலம் எப்படி இருக்கும்…இவர்கலுக்கு உன்கலால் முடிந்தால் தன்னம்பிக்கையை உன்டாக்கவும்.//

    ஜோதிடம் என்பதே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டும்தான் என்பது என் கருத்து. வாழ்க்கைப் போராட்டம் என்ற நோய்க்கு நிச்சயமாக ஜோதிடம் மருந்தல்ல. ஆனால், அது காட்டுவது டாக்டரிடம் செல்ல வேண்டிய வழி மட்டுமே! மேலும், அது ஒன்று மட்டுமே வழிகாட்டும் கருவியும் அல்ல! நீங்கள் கூறியதுபோல தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனைகள், உத்வேகம், விடாமுயற்சி, அயரா உழைப்பு…. போன்ற அத்தனை பாஸிட்டிவ் கருவிகளுமே போதுமானவை, வாழ்க்கையை நடத்துவதற்கு. அவரவர் மனப்பாங்கிற்கு ஏற்றாற்போல கருவிகளை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்.
    ————-
    ஒரே ஒரு கேள்வி ;
    டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டதே 16ஆம் நூற்றாண்டில்தான். பின்னர் எப்படி அதற்கு முந்தைய கால நூல்களில் சனி, வியாழன், செவ்வாய் போன்ற கிரகங்களைப் பற்றிய குறிப்புகளும், பாடல்களும், விவரணைகளும் இருக்க முடியும்? (குறிப்பாகத் தமிழிலேயே!!)

    இந்த ஒரு கேள்விதான் ஜோதிடத்தின்பால் என்னுடைய குறிப்பிடத்தக்க நம்பிக்கையை இறுக்கி வைத்திருக்கிறது.

  5. Abirami A

    Hello sir,
    My name is A.Abirami my date of birth is 23/10/1987 at 5.04 AM and i want to know about my career and can i marry a person who am i loving?

Comments are closed.