ஜோதிடம் கேளுங்கள்

எனக்குத் திருமண யோகம் எப்போது அமையும்? எனது எதிர்காலம் பற்றிச் சொல்லுங்கள்? – கமலாவல்லி, மலேசியா
அன்பு நிலாச்சாரல் வாசகி கமலா வல்லி அவர்களே !

43 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சித்திரை, ராசி துலாம், லக்னம் மிதுனம் ஆகும். மே 2011 முதல், கோசார ரீதியாக தங்களின் ஜாதகத்திலிருந்து 11-ம் இடத்திற்கு மாறும் குரு திருமண பாக்கியத்தை நல்குவார். 10-ம் இடத்தில் சனி அமர்ந்திருப்பதால், தங்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். மேலும், தங்களின் ஜாதகத்தில் 5-ல் கேது, 11-ல் ராகு இருப்பதால், வெள்ளிக்கிழமைதோறும் நாக தெய்வத்தை வழிபடவும். விரைவில் திருமண யோகம் கிட்ட, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

******

நான் சொந்தமாக தொழில் தொடங்கலாமா, எந்த வகையான தொழிலை நான் செய்யலாம்? நிரந்தர வருமானத்திற்கு வழி காட்டவும். – செல்வி, சென்னை

அன்பு நிலாச்சாரல் வாசகி செல்வி அவர்களே !

30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கார்த்திகை, ராசி ரிஷபம், லக்னம் மிதுனம் ஆகும். தங்களின் லக்னத்திலிருந்து 5-ம் இடத்தில் குரு இருப்பதால், தாங்கள் சொந்தமாக கணினி மற்றும் கணினி தொடர்பான பொருட்களை வாங்கி விற்றல் அல்லது கணினி தொடர்பான வேலைகளை ஏற்று அதன் மூலம் பண வரவு பெறலாம். தங்களின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் குரு பகவானை வியாழக்கிழமைதோறும் தரிசனம் செய்து வர, நிரந்தர வருமானம் தானே அமையும். வளமான வாழ்க்கை பெற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!

******

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,

https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism, D.H.A சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response

About The Author