ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? நான் காதலித்து வந்தாலும் என் வாழ்க்கையைப் பற்றி எனக்கு மிகவும் குழப்பமாகவும், மன உளைச்சலாகவும் உள்ளது. எனது ஜாதகப்படி எனக்கு காதல் திருமணமா அல்லது பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணமா என்பதைத் தெரியப்படுத்தவும். – கலைமணி, பொன்னமராவதி

அன்பு நிலாச்சாரல் வாசகர் கலைமணி அவர்களே!
31 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரம், ராசி சிம்மம், லக்னம் மிதுனம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் குரு லக்னத்தில் இருந்து 5,7,9-ம் வீடுகளைப் பார்க்கிறார். இது நல்ல அமைப்பு.
பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் தங்களுக்கு நன்மையைத் தரும். தாங்கள் மிதுன லக்னத்தைச் சேர்ந்தவராதலால் நல்ல அறிவுக் கூர்மை உடையவர். வாழ்க்கையைப் பற்றி வீண் பயம் வேண்டாம். தங்களின் உள்ள பிரதிபலிப்புதான் தங்கள் வாழ்க்கை. ஆக்கபூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை வளமாக இருக்கும். நல்ல சிறப்பான நிலையைப் பெற நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*****

எங்களுக்கு திருமணமாகி நான்கு மாதங்கள் மட்டுமே சந்தோஷமாக இருந்தோம். அதன் பின்னர் சரியான புரிதல் இன்றி மனக்கசப்பே நீடிக்கிறது. எனது எதிர்காலத்தைப் பற்றி சொல்லுங்கள். – கே.மாடசாமி, ராஜபாளையம்

அன்பு நிலாச்சாரல் வாசகர் மாடசாமி அவர்களே!
33 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவாதிரை, ராசி மிதுனம், லக்னம் மகரம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் லக்னாதிபதி கேந்திரத்தில் வலுவாக உள்ளார். எனவே வருங்காலமும், மண வாழ்க்கையும் நன்றாக இருக்கும். தங்களின் மனக் கசப்பு நீங்கி மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமைய, "வருந்தா வகைஎன் மனத்தா மரையினில் வந்துபுகுந்(து) இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப் பொருந்தா திருபொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு விருந்தாக வேலை மருந்தா நதைநல்கும் மெல்லியலே" என்ற அபிராமி அந்தாதிப் பாடலை படித்து வாருங்கள். வளமான எதிர்காலமும், மகிழ்ச்சியான மண வாழ்வும் அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

Comments are closed.