ஜோதிடம் கேளுங்கள்

ஆடி மாதம் குழந்தை பிறந்தால் நல்லதா? – சந்துரு, சேலம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் சந்துரு அவர்களே !

அம்மனின் அருள் பரிபூரணமாக நிறைந்திருக்கும் மாதம் ஆடி மாதம் ஆகும். இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் நல்லது. வீண் பயத்தை விட்டு, தங்களுக்கு பிரியமான பெண் தெய்வத்தை வழிபட்டு வரவும். வாழ்க்கை வளமாக இருக்கும். வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

******


என்னுடய ராசியும் கடகம்; லக்னம் கடகம் ஆகும். ராசிக் கட்டத்தில் உள்ள கிரக நிலை பற்றிக் கூறவும். சிறப்பான எதிர்காலம் அமைய, வாழ்க்கையில் உயர்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்? – எஸ். ஏகாம்பரம், குடியாத்தம்

அன்பு நிலாச்சாரல் வாசகர் ஏகாம்பரம் அவர்களே !

27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூசம், ராசி கடகம், லக்னம் கடகம் ஆகும். சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ள தாங்கள் தேவையற்ற மனக் குழப்பம், பயம் ஆகியவற்றைத் தவிர்த்து ந்ம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தங்களின் லக்னத்திற்கு நன்மை செய்யும் கிரகங்களாக செவ்வாயும், குருவும் உள்ளார்கள். தாங்கள் அந்த இரு கிரகங்களையும், அவர்களுக்கு உரிய நாட்களில் வழிபட்டு வர, வாழ்க்கையில் உயர்வும், சிறப்பும் வந்து சேரும். வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*****

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

  1. Rani

    என் மகல் அயில்யம் நட்சதிரம். அதனல் எதுவும் கெடுதல் உன்டா?

Comments are closed.