பாபா பதில்கள் – மலரும் புதுயுகம்

தொண்டர்காள் தூசி செல்வீர்
பக்தர்காள் சூழப் போகீர்
ஒண்திரல் யோகிகளே
பேரணி உந்தீர்கள்
திண்திறல் சித்தர்களே
கடை கூழை செல்மின்கள்
அண்டர் நாடாள்வோம் யாம்
மாயப்படை வாராமே!
– மாணிக்கவாசகர்.

நாம் எல்லாம் தேவர்கள் உலகத்தில் வாழ்வோம். தேவர்கள் உலகத்தில் ஆள்வோம். அதற்கு தடங்கலாக இருப்பது மாயை. மாயைக்கும் நமக்கும் எப்போதும் ஒரு பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது. அதை வெல்ல என்ன செய்ய வேண்டும்? எல்லா பக்தர்களும் சத்சங்கத்வே நித்சங்கம் என்று சொல்லக் கூடிய வகையில், கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என்று சொல்லக் கூடிய நிலையில் எல்லாரும் ஒன்றாக அந்த மாயையை வெல்ல வேண்டும். அதனால் ஒரு பெரிய ஆன்மீக சைன்யத்தை தயார் செய்யுங்கள் என்று மாணிக்கவாசகர் சொல்கிறார்.

தொண்டர்காள் தூசி செல்வீர்; பக்தர்காள் சூழப் போகீர் – தொண்டர்களே, பக்தர்களே, எல்லாரும் ஒன்றாகக் குழுமுங்கள். ஒண்திரல் யோகிகளே – யாரெல்லாம் இந்த உலகத்தில் யோகிகளாக இருக்கிறீர்களோ, தவத்தினுடைய ஆற்றலைப் பெற்றிருக்கிறீர்களோ, அவர்கள் எல்லோரும் ஒரு பேரணியில் திரளுங்கள். திண்திறல் சித்தர்களே கடை கூழை செல்மின்கள் – எங்கேயெல்லாம் சித்தர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லோரும் கூட வந்து இதில் சேர்ந்து கொள்ளுங்கள். மாயப்படை வாராமே நாம் அண்டர்நாடு ஆள்வோம். அதனால் தொண்டர்களும், பக்தர்களும், யோகிகளும் திண்திறல் சித்தர்களும் ஒன்றாகச் சேர்கிறபோது மாயப்படையிலிருந்து இந்த உலகத்திற்கு விடுதலை கிடைக்கும். அதற்குப் பின்னால் அண்டர்கள் உலகத்தை நாம் ஆள்வோம் என்பதுதான் மாணிக்கவாசகர் சொல்கிற விஷயம்.

இந்த மாயப் படையை வெல்ல ஒரு ஆன்மீக சைன்யம் தேவைப்படுகிறது. அந்த மாதிரி ஒரு சைன்யத்தை உருவாக்குவதுதான் நம்முடைய அமைப்பின் நோக்கம். நாம் செய்து கொண்டிருக்கிற எல்லா விஷயங்களுமே அந்த மாதிரி ஒரு கட்டுக்கோப்பான, ஒரு qualitative -ஆன ஆன்மீக சிந்தனையில் உள்ளவர்களை ஒன்றாக சேர்க்கிற ஒரு உயர்ந்த வாழ்க்கை தத்துவம். இந்த அமைப்பில் ஒரு சின்னக் குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் எல்லோருக்குமே ஒரு self-discipline இருக்கும். இத்தனைக்கும் they will be totally informal. Natural -ஆக, விளையாடிக்கிட்டே, அரட்டை அடிச்சிகிட்டே இருப்போம். And we have gone beyond the barriers of religion, caste, age, gender, ‘myths’ or ‘isms’ ‘- எதுவுமே நம்ப பிலாசஃபியில் கிடையாது. Very casual and at the same time very disciplined organisation. பார்த்தால் தெரியும். எல்லோரும் ஒருபோல நடத்தப் படுவார்கள். நம்பகிட்டே பாரபட்சமே கிடையாது, totally impartial organisation. VIP concept கிடையாது இங்கே. இந்த ஆர்கனைசேஷன் பின்னாடி அரசியல்வாதிகள் கிடையாது. செல்வந்தர்கள் கிடையாது. All are educated, middle class persons. எனவே இவர்களை இயக்கி ஒரு வித்தியாசமான அணுகுமுறையில், வித்தியாசமான சமூகக் கண்ணோட்டத்தோடு – வெறும் சாமி கும்பிட்டுவிட்டுப் போவதை எல்லாரும்தான் பண்ணுவாங்க – ஒரு சமுதாயம் சார்ந்த புதிய சிந்தனைகளோடு, புதிய உத்திகளோடு ஒரு வித்தியாசமான சமுதாய அமைப்பை இங்கே நாம் இந்த உலகத்திற்கு உதாரணமாக உருவாக்குகிற முயற்சியில் இருக்கிறோம் என்பதை நம்மை அறிந்தவர்கள் அறிவார்கள். We know where we are; we are very successful. ஒரு காலகட்டத்தில் நம்மைச் சரியாக புரிந்து கொள்ள முடியாதவர்கள் எல்லாம் கூட இன்றைக்குப் பார்த்து மிரளுகிற மாதிரியான ஒரு வெற்றியை நாம் சுவைத்துக் கொண்டிருக்கக் கூடிய காலகட்டம். We are very successful and have nothing to grumble about. We have everything an organisation can ask for. More than anything, we have God with us. It is a proud privilege that God is with us.

About The Author

2 Comments

Comments are closed.