ஜோதிடம் கேளுங்கள்

1) தற்பொழுது வேலை இல்லை, எப்பொழுது எனக்கு நல்ல வழி பிறக்கும்? 2) எனக்கு திருமணம் எப்பொழுது? – இப்ராஹிம் ஷா, மதுரை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் இப்ராஹிம் ஷா அவர்களே !

28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசீர்ஷம், ராசி மிதுனம், லக்னம் கும்பம், தங்களின் ராசிப்படி குரு நன்மைகளை அள்ளித்தரும் 11-ம் வீட்டில் உள்ளதால், வேலை திருமணம் இரண்டும் மே மாதம் 2012 க்குள் முடிந்து விடும். தங்களுக்கு குருவாய் விளங்கும் ஆண்டவனை வியாழக்கிழமை தோறும் வழிபட்டு வரவும். தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

********************

என் நட்சத்திரம் என்ன? அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்புண்டா? – விசாலாக்ஷி, சென்னை.

அன்பு நிலாச்சாரல் வாசகி விசாலாட்சி அவர்களே !

தாங்கள் கொடுத்த பிறந்த தேதிக்கு, காலை ஜனனம் என்றால் சதயம் நட்சத்திரமும், மதியம் என்றால் பூரட்டாதி நட்சத்திரமும் வருகிறது. தங்களின் ராசிப்படி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அஷ்டம சனி டிசம்பர் 2011 முடிவடைகிறது. இதற்குப் பிறகு வாழ்க்கையிலும், வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். அது வரை, சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபட்டு வரவும். சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A. சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author