அனாடமிக் தெரபி (1)

அனாடமிக் தெரப்பி என்றால் என்ன?

நமக்கு ஒரு நோய் வந்தால் நாம் ஒரு வைத்தியரிடம் போவோம். உலகத்தில் உள்ள எல்லா வைத்தியர்களும் மருந்து, மாத்திரை, ஊசி, அக்குபஞ்சர், நியூரோதெரபி, சித்தா, முத்ரா, மூலிகை, யூனானி, பிரணக் ஹீலிங், டச் ஹீலிங் அக்குபிரஷர், மேக்னட் தெரபி, யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம், இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம் என்று ஏதாவது ஒரு மருத்துவ வழியில் நம்மைக் குணப்படுத்தி வருகிறார்கள்.

ஆனால், நமது இந்தச் சிகிச்சையில் எந்த ஒரு மருந்தும், மாத்திரையும் கிடையாது. இரத்த டெஸ்ட் செய்யத் தேவையில்லை. நாடி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஸ்கேன் எடுக்கத் தேவையில்லை. வாக்கிங் போக வேண்டிய அவசியம் இல்லை. பத்தியமும் கிடையாது. ஆனால், நோய்களைக் குணப்படுத்த முடியும்! உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும், அது எப்படி என்று. இந்தச் சிகிச்சையில் நாம் யாருடைய நோயைப் பற்றியும், அதன் பெயரையும் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலேயே அதைக் நோயைக் குணப்படுத்த முடியும். இன்று பல மருத்துவமுறைகளில், "நோயைக் குணப்படுத்த முடியாது வாழ்க்கை முழுவதும் கன்ட்ரோல் செய்துகொண்டுதான் வாழ வேண்டும்" என்று மருந்துகளையும், மாத்திரைகளையும் வழங்குகிறார்கள். ஆனால் நம் சிகிச்சையில், ஒரு நோயாளி தன் நோயைப் பற்றி நம்மிடம் கூறாமலேயே எந்த டெஸ்டும் எடுக்காமலேயே அந்த நோய்களைக் குணப்படுத்த முடியும். என்னதான் செய்வீர்கள் என்று கேட்கத் தோன்றும். நாம் ஓர் ஆறு மணி நேரம் தொடர்ந்து பேசுவோம். அதை நோயாளி காது கொடுத்துக் கேட்க வேண்டும். இதுதான் சிகிச்சை! நாம் பேசுவதை நோயாளி கேட்டால் எப்படி நோய் குணமாகும் என்று மீண்டும் ஒரு சந்தேகம் தோன்றும்.

நம் உடலில் ஒரு சுரப்பி உள்ளது. அதில் ஒரு திரவம் சுரக்கிறது. அந்தத் திரவம் உலகில் உள்ள நோய்களில் 95 சதவீத நோய்களைக் குணப்படுத்துகிறது! அந்தச் சுரப்பியின் பெயர் என்ன, அது நம் உடலில் எங்கே உள்ளது, அது சுரக்கும் திரவத்தின் பெயர் என்ன, அந்தத் திரவம் எப்படி அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது என்கிற இரகசியங்களும் அதை எப்படிச் சுரக்க வைப்பது என்கிற வித்தையும் எனக்குத் தெரியும். அந்த ரகசிய வித்தையை ஒரு நோயாளிக்குக் கற்றுக் கொடுப்பதற்குச் சுமார் ஆறு மணி நேரம் தேவைப்படுகிறது.

நோயாளி அந்த வித்தையைக் காது வழியாகக் கேட்டுப் புரிந்து கொண்டு செயல்படும்பொழுது அவருடைய நோயை அவராகவே குணப்படுத்திக் கொள்கிறார். இப்படி ஆறு மணி நேரம் தொடர்ந்து கேட்டுத் தெரிந்துகொள்ளும் அந்த விஷயத்தை, இப்பொழுது நீங்கள் இந்தத் தொடரின் மூலமாகப் படித்துத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

இதைப் படிக்கும் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்! சிலர் கேட்கலாம், பத்து வருடங்களாகச் சர்க்கரை நோய் எனக்கு இருக்கிறது. இந்தத் தொடரைப் படித்தால் என் சர்க்கரை நோய் குணமாகிவிடுமா? கண்டிப்பாகக் குணமாகும். இந்தத் தொடரை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை படித்து முடித்த அடுத்த வினாடி முதல் நீங்கள் இனிப்பு சாப்பிடலாம், வாழ்க்கை முழுவதும். அடுத்த வினாடி முதல் உங்களுக்குச் சர்க்கரை நோய் என்கிற நோய் கிடையாது. அதே போல், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்தத் தொடரைப் படித்த அடுத்த வினாடி முதல் உணவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளலாம். வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு ஒன்றும் ஆகாது!

வாயுத் தொல்லை உள்ளவர்கள் இந்தத் தொடரைப் படித்த முடித்த அடுத்த வினாடி முதல் மூன்று நேரமும் உருளைக்கிழங்கு போண்டா சாப்பிட்டாலும் உங்களுக்கு வாயுத் தொல்லை இருக்காது.

கொழுப்புக் கட்டிகள், HDL, LDL போன்ற கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள், இந்தத் தொடரை முழுவதுமாகப் படித்து முடித்த அடுத்த வினாடி முதல் எண்ணெய்ப் பலகாரமும் தேங்காயும் தாராளமாகச் சாப்பிடலாம். அது உங்களுக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்காது. நோய்களைக் குணப்படுத்தும்.

சர்க்கரை, இரத்த அழுத்தம், ஆஸ்துமா, தைராய்டு, கேன்சர், எய்ட்ஸ் போன்ற நோய்களைக் குணப்படுத்த முடியாது என்றும், வாழ்நாள் முழுவதும் கன்ட்ரோல் மட்டுமே செய்ய முடியும் என்றும்தான் இதுவரை மருத்துவர்கள் கூறி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இந்தத் தொடரை முதல் வாரம் முதல் கடைசி வாரம் வரை பொறுமையாகப் படிக்கும் நீங்கள், படித்து முடிந்த அடுத்த வினாடி இது போன்ற அனைத்து நோய்களையும் கண்டிப்பாக நீங்களே குணப்படுத்திக் கொள்ளலாம்! ஆனால், முழுவதுமாகப் படித்து முடிக்க வேண்டும்! இந்த முதல் வாரம் தொடங்கிக் கடைசி வாரத்தின் கடைசிப் பக்கம் வரை!

இந்தச் சிகிச்சையில் பத்தியம் கிடையாது. எந்தெந்த நோய்க்கு எதைச் சாப்பிடக்கூடாது என்று கூறினார்களோ அதைச் சாப்பிட்டே நம் நோய்களைக் குணப்படுத்தலாம். மேலும், நோய்களின் தன்மையையும் வீரியத்தையும் பொறுத்து, படிப்படியாக 3 மாதம் முதல் 6 மாதத்திற்குள் மருந்து மாத்திரைகளை நிறுத்திவிடலாம்.

மிகவும் ஆச்சரியமாக இருக்கும். பலருக்கு "அது சாத்தியமே கிடையாது! என்ன உளறுகிறீர்களா" என்று கூட மனதில் எண்ணம் வரும். தயவு செய்து இந்தத் தொடரை முழுவதும் படிக்காமல் இந்தச் சிகிச்சையைப் பற்றி யாரும் எந்த ஒரு முடிவுக்கும் வர வேண்டாம்! முதலில் படியுங்கள்!

நோய்களைக் குணப்படுத்த முடியாது என்று கூறுவதற்கு மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தேவை இல்லை. குணப்படுத்த முடியும் என்று சொல்லிக் கொடுப்பவர் மட்டுமே மருத்துவர், ஆராய்ச்சியாளர்.

உங்கள் நோயைக் குணப்படுத்தும் மருத்துவர் 60 வயதிற்கு மேலே இருக்கவேண்டும்; வெள்ளைத் தாடி வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கிறீர்களா? அல்லது பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து மட்டுமே நான் நோய்களைக் குணப்படுத்திக் கொள்வேன் என்று உங்களுக்கு வைராக்கியம் இருக்கிறதா? மருந்து, மாத்திரை சாப்பிட்டுத்தான் நோய்களைக் குணப்படுத்திக் கொள்வேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை, நமக்குத் தேவை என்ன? நமக்கு வந்த நோயைக் குணப்படுத்தினால் போதும்! இந்தத் தொடரை முழுவதும் படிப்பது மூலமாக எந்த ஒரு மருந்து, மாத்திரை, இரத்தச் சோதனை, ஸ்கேன், ஏன் மருத்துவரின் உதவி கூட இல்லாமல் நோயைக் குணப்படுத்திக் கொள்வதற்கு ஒரு இரகசியம் உள்ளது என்றால் இந்தத் தொடரைப் படித்துத்தான் பாருங்களேன்!

நீங்கள் மருத்துவத்துறையில் இருப்பவரா? மருத்துவரா? நீங்கள் எந்த மருத்துவத்தைப் படித்து இருந்தாலும், இந்தத் தொடரைப் படித்து விட்டால் இனி உங்கள் வாழ்க்கையில் குணப்படுத்த முடியாது என்று எந்த நோயையும் நீங்கள் கூறமாட்டீர்கள். நம்மைப் பொறுத்தவரை, இதை ஒரு நோயாளி படிப்பதைவிட மருத்துவர்கள் படித்தால் அவர்கள் மூலமாகப் பல லட்சம் மக்களுக்கு இந்தச் சிகிச்சை சென்று அடையும் என்று நம்புகிறோம். எனவே, மருத்துவர்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்! நீங்கள் படித்த படிப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து ‘நமக்குத் தெரியாதது என்ன இருக்கிறது’ என்று நினைக்காமல் இந்தத் தொடரை முழுவதுமாகப் படித்துப் பாருங்கள்! உண்மை உங்களுக்குப் புரியும்.

இந்தச் சிகிச்சையில் எந்தெந்த நோய்களைக் குணப்படுத்த முடியும்?எந்தெந்த நோய்களைக் குணப்படுத்த முடியாது?

நோய்களை மொத்தம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, உடலின் உள்ளே இருந்து வரும் நோய்கள்; இரண்டு, வெளியே இருந்து வரும் நோய்கள். கத்தியால் நமது கண்ணில் ஒரு பாதிப்பு ஏற்படுத்தினால், அதாவது ஒரு நபருக்குக் கத்தி கண்ணுக்குள் பாய்ந்துவிட்டால் நமது சிகிச்சை அவருக்குப் பயன் அளிக்காது. உடனடியாகக் கண் மருத்துவரைச் சந்தித்து அவர் தன் கண்ணைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். துப்பாக்கியால் சுடப்பட்ட ஒரு நபரை இந்தச் சிகிச்சையால் குணப்படுத்த முடியாது. விபத்துக்கள், பாம்பு கடித்தல், விஷப் பூச்சிகள் கடித்தல், கை கால் உடைதல், இதுபோன்ற எதிர்பாராமல் நடக்கும், உறுப்புகளைச் சேதப்படுத்தும் எந்த ஒரு நோய்க்கும் இந்தச் சிகிச்சையால் தீர்வு காண முடியாது. ஆனால், உடலின் உள்ளே இருந்து வரும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், தைராய்டு கோளாறு, புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களைக் கண்டிப்பாகக் குணப்படுத்த முடியும்.

நோய்களை இரண்டு வகையாகப் பிரித்துப் பார்த்துப் பழகுங்கள். மேற்கண்ட நோய்கள், யாராவது ஏதாவது ஒரு பொருளை வைத்து நம் உடலைத் தாக்கியதால் ஏற்பட்டவையா? இல்லை. அவை தானாக நம் உடலுக்குள் தோன்றியவை. கிட்னியில் கல் என்பது என்ன? நீங்கள் கல்லைச் சாப்பிட்டீர்களா? அது தானாகத் தோன்றியது. கர்ப்பப்பையில் கட்டி என்றால், நீங்கள் கட்டியைச் சாப்பிட்டீர்களா? அது தானாக வந்தது. இதே போல், உங்கள் நோய் எந்தப் பொருளும் தாக்காமல், உடலின் உள்ளேயே ஏற்பட்டது என்றால் அந்த நோயை நமது சிகிச்சை மூலமாகச் சுலபமாகக் குணப்படுத்த முடியும். ஆனால், வெளியே இருந்து வரும் நோய்களையும், பிறக்கும்பொழுதே சில உறுப்புகள் பாதிப்பதால் ஏற்படும் நோய்களையும் இந்தச் சிகிச்சையால் குணப்படுத்த முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

உள்ளே இருந்து வரும் நோய்கள் 95% ஆகும். வெளியே இருந்து வரும் நோய்கள் வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே! எனவே, உலகிலுள்ள நோய்களில் 95% நோய்களை நமது சிகிச்சையின் மூலமாகக் கண்டிப்பாகக் குணப்படுத்த முடியும்! இந்த விளக்கத்திலிருந்தே இந்தச் சிகிச்சை எந்தெந்த நோய்களுக்கானது என்பது உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும். இருந்தாலும், இங்கே சில நோய்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இவை கண்டிப்பாக நமது சிகிச்சையின் மூலம் குணமாகும்.

* சர்க்கரை நோய்
* இரத்த அழுத்தம் (B.P)
* தைராய்டு கோளாறு
* முடி கொட்டுதல்
* வெள்ளை முடி
* தலையில் ஏற்படும் பொடுகு, புண்கள், தலைவலி
* கிட்டப்பார்வை, தூரப்பார்வை கண்ணில் புரை, குளுக்கோமா முதலிய கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும்.
* சைனஸ்
* தும்மல்
* இருமல்
* மூக்கு ஒழுகுதல், சளி பிடித்தல், நெஞ்சுச் சளி, ஆஸ்துமா, வீசிங், மூக்கடைப்பு முதலான சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளும்.
* எலும்புருக்கி நோய் (T.B)
* நிமோனியா
* பல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும்
* திக்குவாய்
* வாய் உளறுதல்
* எச்சில் சுரக்காமை
* டான்சில்
* இருதயத்தில் வால்வுகள் அடைத்தல், வால்வுகள் விரிதல், சுருங்குதல் இருதய அடைப்பு போன்ற இருதய சம்பந்தப்பட்ட அனைத்தும் நோய்களும்
* பக்கவாதம்
* மறதி
* அஜீரணம்
* வாயுத் தொல்லை
* I.B.S (Irritable Bowl Syndrome)
* மஞ்சள் காமாலை முதலான கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும்
* வலிப்பு
* குடல் இறக்கம்
* பித்தப் பையில் கல் போன்ற மண்ணீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும்
* மூத்திரப் பையில் கல்
* சிறுநீரகத்தில் கல், சிறுநீரகம் கெட்டுப் போகுதல் போன்ற சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும்
* மாதவிடாய் தவறுதல், வயிற்று வலி, வெள்ளைப்படுதல், கர்ப்பப்பையில் கட்டி போன்ற கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும்
* குழந்தையின்மை
* ஆண்மைக் குறைவு
* நெஞ்சு வலி
* இடுப்பு வலி
* தொடை வலி
* மூட்டுவலி
* மூட்டுத் தேய்மானம்
* கால் மூட்டில் சவ்வு விலகுதல்
* சரவாங்கி எனப்படும் மூட்டு முழங்கால்வாதம்
* முகவாதம்
* கெண்டைக் கால் வலி
* கணுக்கால் சம்பந்தப்பட்ட நோய்கள்
* உள்ளங்கால் குத்துதல், குடையுதல் உள்ளங்கால் மதமதப்பாக இருத்தல்
* சொரியாசிஸ், எக்ஸிமா, தோல் வெள்ளைப்படுதல் போன்ற தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும்
* வெரிக்கோஸ்லைன் (நரம்பு சுருளுதல்)
* யானைக்கால் வியாதி
* புற்று நோய்
* எய்ட்ஸ்
மற்றும் பல நோய்களை நமது சிகிச்சை முறையில், கண்டிப்பாக நீங்களே குணப்படுத்திக் கொள்ளலாம்!

எப்படி என்பது அடுத்த வாரம் முதல்…

*********

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.

About The Author

1 Comment

Comments are closed.