அனாடமிக் தெரபி (18)-நீரிழிவு நோய்

சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோய் – 1 இங்கே!

சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோய் – 2

சர்க்கரை ஒரு ஐசோமர். உயிர்ம வேதியியல் (Bio – Chemistry ) படித்தவர்களுக்கு நன்றாகப் புரியும் என நினைக்கிறேன். ஒரே பொருளில் நிறைய வகைகள் (Type) இருந்தால் அதை ஐசோமர் என அழைக்கிறோம்.

சர்க்கரையில் உள்ள கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவை அளவு மாறாமல் வேவ்வேறு இடங்களுக்கு மாறி அமைவதால் சர்க்கரையின் வகை மாறுகிறது.

லேக்டோஸ், மேனோஸ், ஒற்றைச் சர்க்கரை, கூட்டுச் சர்க்கரை – இப்படிச் சர்க்கரையில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு கட்டமைப்பு (STRUCTURE) உள்ளது.

இவற்றுள், ஒரு சில வகைச் சர்க்கரைகள் மட்டுமே மனித உடம்பிலுள்ள செல்களுக்குப் பொருந்தும். ஒரு சில சர்க்கரைகள் பொருந்தாது. எந்தெந்த வகைச் சர்க்கரை மனித உடம்புக்குப் பொருந்துமோ அவை அனைத்தும் நல்ல சர்க்கரைகள்.

எவையெல்லாம் பொருந்தாதோ அவை அனைத்தும் கெட்ட சர்க்கரைகள். கணையம், எந்த வகைச் சர்க்கரை மனித உடம்புக்கு ஒத்து வருமோ, அதற்கு மட்டுமே இன்சுலின் கொடுக்கும். மனித உடலுக்கு நோயை உண்டு பண்ணுகிற, ஒத்து வராத, தேவைப்படாத சர்க்கரைகளுக்கு இன்சுலின் கொடுக்காது.

நாம் மருத்துவமனைகளில் சென்று சர்க்கரைச் சோதனை செய்கிறோம். அதில் 100 இருக்கிறது, 200 இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், அந்த அளவில் எந்தெந்த சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று யாரும் அளந்தது கிடையாது. இப்படி, மொத்தமாகச் சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. நாம் பார்க்கும் சர்க்கரையின் அளவில் எந்தெந்த வகைச் சர்க்கரை எந்த அளவு இருக்கின்றது எனப் பார்ப்பதற்குத் தனியாக ஒரு கருவி உள்ளது. அதன் பெயர் IR STUDY மற்றும் UV Spectrum Study. இந்த வசதி உள்ள கருவிகளில் மட்டுமே இரத்தத்திலுள்ள சர்க்கரை வகைகளைக் கண்டறிய முடியும். இந்தக் கருவிகள் எந்த மருத்துவமனையிலும் கிடையாது. பெரிய பெரிய ஆராய்ச்சிக்கூடங்களில் மட்டுமே உள்ளன. எனவே, சர்க்கரையைப் பொதுவாகச் சோதனை செய்து பார்ப்பதில் எந்த அர்த்தமுமில்லை. எந்தப் பயனும் கிடையாது.
மருத்துவமனையில் நீரிழிவுச் சோதனை முடிந்ததும் அறிக்கையில் (ரிசல்ட்) ‘இரத்தத்தின் சர்க்கரை அளவு’ (Blood Glucose Level) என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.உண்மையில், இரத்தத்தின் சர்க்கரை அளவை யாரும் பார்ப்பது கிடையாது. இப்பொழுது பார்க்கப்படும் அளவு Plasma Glucose Level ஆகும். Plasma Glucose Level என்பது வேறு. இரத்தத்தின் சர்க்கரை அளவு என்பது வேறு.

சொல்லப் போனால், சர்க்கரை நோயென்பது கணையம் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நாம் சாப்பிடுகிற சாப்பாட்டில் உள்ள சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகாததால் கணையம் இன்சுலின் கொடுக்க மறுக்கிறதே தவிர, கணையம் தவறு செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! எப்பொழுது உடலில் இன்சுலின் பற்றாக்குறை ஏற்படுகிறதோ நாம் உணவை ஒழுங்காக ஜீரணம் பண்ணவில்லை என்றுதான் அர்த்தமே தவிர, கணையத்தில் குறை கிடையாது. இதற்கும் உடலிலுள்ள உறுப்புகளுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. எனவே, உணவை எந்த முறையில் சாப்பிட்டால் அது இரத்தத்தில் நல்ல சர்க்கரையாகக் கலக்கும் என்கிற ஒரே ஒரு சுலபமான வித்தையைக் கற்றுக் கொள்வது மூலமாக நாம் இந்த நிமிடத்தில் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும். கணையம் இன்சுலின் வைத்துக் கொண்டிருக்கிறது. அது உங்களுக்குத் தராமல் வேறு யாருக்குக் கொடுக்கும்? முன்பே பார்த்தபடி, நாம் சாப்பிடுவது நல்ல சர்க்கரையாக இருந்தால் மட்டுமே கணையம் இன்சுலினைக் கொடுக்கும். கெட்ட சர்க்கரையாக இருந்தால் கொடுக்காது. இந்த நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என்பவை என்ன என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள மேற்கொண்டு சில எடுத்துக்காட்டுகளையும் விளக்கங்களையும் பார்க்கலாம்.

அடுத்த வாரம்!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்

About The Author

2 Comments

  1. abr

    அருமையன கட்டுரை இதனை தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்

  2. thanigasalam

    மிகவும் பயனுள்ள கட்டுரை. இதுவரை நான் அறிந்திராத பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.
    மிக்க நன்றி

Comments are closed.