அனாடமிக் தெரபி (21)

ஹை சுகர், லோ சுகர் – சில தகவல்கள் – 2

சீரான சர்க்கரை அளவு (Normal Sugar level) என்பது ஆபரேஷன் செய்யும்பொழுதும், அவசரக் காலத்திலும் மட்டுமே செல்லுபடியாகும் என்று கடந்த வாரம் பார்த்தோம். ஏன் என்று கேட்டால், சில அவசரக் கால சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கே கணையத்தில் அடிபட்டு இருக்கிறதா என்று கவனிக்க வேணடும். கல்லீரல் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. இந்த நேரத்தில் இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் வைத்தால் உயிரைக் காப்பாற்றலாம் என்பதுதான் அறிவியல். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் சீரான சர்க்கரை அளவு என்பது.

இதற்காகத்தான் மருத்துவர்களுக்கு இது அவர்கள் படிப்பில் சொல்லிக் கொடுக்கப்பட்டது. இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் சர்க்கரை மருந்து மாத்திரைகள்.

சரி, ஹை சுகர், லோ சுகர் போன்றவற்றால் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்து விட்டால், அவரை என்னிடம் கூட்டிக் கொண்டு வந்தால், நான் அவர் காதில் "சர்க்கரை என்பது நோயே அல்ல! எழுந்து உட்காருங்கள்" என்று சொன்னால் உட்காருவாரா? மாட்டார்.

அவருக்கு மருந்து, மாத்திரை, இன்சுலின் கொடுக்கத்தான் வேண்டும். அப்போதுதான் உயிரைக் காப்பாற்ற முடியும். எனவே, சர்க்கரை மருந்து, மாத்திரைகள் உயிரைக் காப்பாற்றும் அற்புதமான கண்டுபிடிப்பு. ஆனால், அதை இப்படிப்பட்ட அவசரக் காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாழ்க்கை முழுவதும் பயன்படுத்துவது தேவையில்லாத ஒன்று. சரி, சர்க்கரை மருந்து, மாத்திரை என்ன செய்கிறது?

சர்க்கரை 400 இருக்கும்பொழுது, அதாவது ஹை சுகரில் மயக்கம் போட்ட ஒரு நோயாளி சர்க்கரை மாத்திரை சாப்பிட்டவுடன் அந்த மாத்திரை நேராகச் சென்று கணையத்திடம் “அந்த 400 கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் கொடு” என்று கேட்கும். கணையம் சொல்லும், “நான் தர மாட்டேன். என்னிடம் இன்சுலின் உள்ளது. ஆனால், அந்தச் சர்க்கரைகள் ஒழுங்காக ஜீரணமாகவில்லை என்பதால் நான் கொடுக்கவில்லை. ஏனென்றால், கெட்ட சர்க்கரை செல்லிற்குள் சென்றால் உறுப்புகளுக்கு நோய் வரும்” என்று.
மாத்திரை இந்தக் கணையத்திடம் வலுக்கட்டாயமாக இன்சுலின் வாங்கி இந்த 400 கெட்ட சர்க்கரைக்குக் கொடுத்து விடும். மருந்து, மாத்திரை கெட்ட சர்க்கரையை நல்ல சர்க்கரையாக மாற்றுவது கிடையாது. அவை கெட்ட சர்க்கரைக்கு நல்ல சர்க்கரையென்ற போலிச் சான்றிதழை வாங்கிக் கொடுத்து விடுகின்றன. எனவே, சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரைகளை அவசரக் காலத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் அவை.

உங்களுக்குப் பெரிய அறிவியல் எல்லாம் தெரிய வேண்டிய அவசியம் கிடையாது. சிறிய, அடிப்படையான ஒரு விஷயத்தை மட்டும் யோசியுங்கள்! சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் மாத்திரையின் அளவு போகப் போக அதிகமாகிறதா, குறைகிறதா? எப்பொழுது அதிகமாகிறதோ அப்பொழுது உங்கள் நோய் பெரிதாகிக் கொண்டு வருகிறது என்று அர்த்தம். ஒரு நோயைக் குணப்படுத்துவதற்கு மருத்துவர் தேவையா அதிகப்படுத்துவதற்கு மருத்துவர் தேவையா?

ஏன் மருந்தின் அளவு அதிகமாகிறதென்றால், கெட்ட சர்க்கரைகள் எல்லா உறுப்புகளுக்குள்ளும் செல்லும்போது எல்லா உறுப்புக்களும் பாதிப்படைகின்றன. கணையமும் பாதிப்படைகிறது. சர்க்கரை நோய் வந்தால் எல்லா நோயும் வருமென்று கூறுவார்கள். இது தவறான கருத்து. சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டால்தான் எல்லா நோயும் வருமென்பதுதான் ஆணித்தரமான உண்மை.

சர்க்கரை நோய் வந்தவர்கள் முதலில் மாத்திரை சாப்பிட்டால், பிறகு அளவு அதிகமாகிக் கொண்டே போகும். பிறகு, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும். கண்ணில் பாதிப்பு ஏற்படும். பிறகு கண் சம்பந்தப்பட்ட நோய்க்குத் தனி மருந்தும், சில அறுவை சிகிச்சைகளும் செய்ய வேண்டி இருக்கும். பிறகு சிறுநீரகத்தில் கல் வரும். அதற்குத் தனி மருந்தும், அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியதிருக்கும். உடல் சோர்வு ஏற்படும். புதுப் புது நோய்கள் வரும். ஆனால், எல்லா மருத்துவர்களும் சாக்கரையை நீங்கள் ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் நோய்கள் வந்து விட்டன என்று கூறுவார்கள். உண்மையில், சர்க்கரையை ஒழுங்காக வைத்திருந்ததால்தான் நோய் வந்தது என்பதுதான் உண்மை.

இப்படி, மருந்து மாத்திரை கம்பெனிகள் குழந்தையைக் கிள்ளி விட்டுத் தொட்டிலை ஆட்டுவது போல நல்லது செய்வது போல் நமக்கு மருந்து மாத்திரைகளைக் கொடுத்து நமக்கு அனைத்து நோய்களையும் வர வைத்து அனைத்து மருந்து, மாத்திரைகளையும் விற்பதற்காக, அறுவை சிகிச்சைகள் செய்து சம்பாதிப்பதற்காகப் போட்ட அற்புதமான திட்டம்தான் சர்க்கரை நோயென்ற ஒரு வியாபாரத் திட்டம்!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author

1 Comment

  1. vettriyarasan

    மாத்திரைகள் தான் போலிகள். ஆனால் கணையத்தையே ஏமாற்றும் திறன் படைத்தாக உள்ளதே? சக்கரை உள்ளோர்களுக்கு இயற்கையிலே இறைவன் காரத்தின் மீது நாட்டத்தை வைத்துள்ளான் என்பதை அனுபவம் வாயிலாக நான் அறிந்த உண்மை. இனிப்பு மீது அதிகம் நாட்டம் உள்ளவர்களுக்கு உடலில் காரச்சத்து குறைவாக இருப்பதும் உண்மை. நெருப்புக்கு நீரும், இனிப்புக்கு காரமும், துவர்ப்புக்கு உவர்ப்பும், பிளஸ்க்கு மைனஸ்சும்,கருப்புக்கு சிவப்பும் உள்ளதை போல தான் சரிசெய்ய வேண்டும்;

Comments are closed.