அனாடமிக் தெரபி (64)

சிறுநீர் கழித்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும்!

எப்பொழுதெல்லாம் நாம் சிறுநீர் கழிக்கிறோமோ அப்பொழுதெல்லாம் நமக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது என்று பொருள். எனவே, சிறுநீர் கழித்தவுடனேயே குறைந்த அளவாவது நீரைச் சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
நல்ல குடிநீர் எது என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

தண்ணீர் நல்லதா கெட்டதா என்பதைக் கண்டுபிடிக்க சுலபமான ஒரு வழி, அந்தத் தண்ணீரில் மீனை வளர்த்துப் பார்ப்பதுதான். அந்த மீன் தண்ணீரில் உயிருடன் இருந்தால் அது குடிப்பதற்கு உகந்த நீர். மீனைப் போட்டவுடன் அது மூச்சுத் திணறினால் அதில் உயிர்ச்சத்து இல்லை என்று பொருள்.

நீங்கள் ஆழ்துளைக் கிணற்று நீரில் (bore well water) இந்தச் சோதனையைச் செய்து பார்க்கலாம். நிலத்திற்குக் கீழே 10 அடி, 15 அடி வரைக்கும்தான் தண்ணீரில் உயிர்ச்சத்து என்கிற பிராண சக்தி இருக்கும். 50 அடி, 100 அடி ஆழத்தில் உள்ள தண்ணீரை எடுத்து அதில் மீனை விட்டால் உடனே மீன் இறந்து விடும். எனவே, குடிக்கும் நீரில் மீனை வளர்த்துப் பார்த்து 24 மணி நேரத்துக்கு அந்த மீன் எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் வாழ்ந்தால் அந்த நீரை நாம் குடிக்கலாம்.

******

நீர் பற்றிய தலைப்பின் கீழ் இத்தனை வாரங்களாகச் சொல்லப்பட்ட இந்த வழிமுறைகளில் நாம் நீரைக் குடிப்பது மூலமாகத் தண்ணீரை நல்ல முறையில் ஜீரணம் செய்து, இரத்தத்தில் கலக்கச் செய்து இரத்தத்தில் உள்ள நீர் சக்தியையும் நீர் சம்பந்தப்பட்ட பொருட்களையும் நல்ல பொருட்களாக சரியான அளவு வீரியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.

வாழ்வோம் ஆரோக்கியமாக!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author