அனாடமிக் தெரபி (7)-தடுப்பூசி

தடுப்பூசி என்றால் என்ன? அது நல்லதா கெட்டதா?

தடுப்பூசி பற்றிக் கேள்விப்படாத நபர்களே இருக்க முடியாது. பிறந்த குழந்தைக்குப் பிறந்த அன்றே தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட நோய்க்கிருமியை அழிக்க அதே கிருமியை உடலுக்குள் அனுப்புவதைத் தடுப்பூசி முறை (Vaccination) என்கிறோம்.

தடுப்பூசியில் நிறைய வகைகள் உள்ளன. ஒரு சில தடுப்பூசிகளில் உயிருடன் கிருமிகளை அனுப்புவார்கள். சிலவற்றில் இறந்த கிருமிகளையும், ஒரு சிலவற்றில் பாதி இறந்து மயக்க நிலையில் உள்ள கிருமிகளையும் அனுப்புவார்கள்.

பிறந்த குழந்தைக்கு அ, ஆ, இ, ஈ-யோ ஏ, பி, சி, டி-யோ தெரியாது. தான் ஒரு மனிதன் என்றே குழந்தைக்குத் தெரியாது. ஆணா பெண்ணா என்று கூடத் தெரியாது. அப்படிப்பட்ட சிறு குழந்தைக்குப் பிறந்த அன்றே தடுப்பூசி என்ற பெயரில் நோய்க்கிருமியை உடலில் அனுப்புவது எந்தத் தைரியத்தில் என்று கேட்டால், மனித உடலுக்கு உள்ள அறிவின் மீதான தைரியத்தில்தான்.

மனித உடலுக்கு என்று அறிவு ஒன்று உள்ளது. எந்த நோய்க்கிருமி உடலுக்குள் புகுந்தாலும் அது நல்ல கிருமியா அல்லது உடலுக்கு நோய் உண்டு செய்யும் கெட்ட கிருமியா என்று அந்த அறிவு ஆராய்ச்சி செய்யும். நல்ல கிருமிகள் பல ஆயிரக்கணக்கானவை உள்ளன. அவற்றை நம் உடல் ஒன்றும் செய்யாது. உடலுக்கு நோயை ஏற்படுத்தும் கெட்ட கிருமிகளைக் கண்டுபிடித்துவிட்டால் உடலில் உள்ள தைமஸ் சுரப்பி, கல்லீரல், மண்ணீரல், எலும்பு மஜ்ஜைகள், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளும் பல சுரப்பிகளும் ஒன்று சேர்ந்து, அந்தக் கிருமிகளை அழிப்பதற்கு எந்த மாதிரி மருந்து வேண்டும் என்று ஆராய்ந்து, அந்த மருந்தைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களையும், அவற்றை எந்தவிதத்தில் கலக்க வேண்டும் என்பதையும் ஆராய்ச்சி செய்து, அந்த மருந்தைக் கிருமிகள் மேல் செலுத்தி அழிக்கும்.

இப்படி, உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் இயற்கையாகவே, பிறந்த நாள் முதல் நோய்க்கிருமியை அழிக்கும் ஆற்றல் இருக்கும் என்கிற ஒரு நம்பிக்கையில் மட்டுமே உலகத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்படுகிறது. உடலுக்கு அதை நோய்க்கிருமி என்று அறிமுகப்படுத்தி அதை அழிக்கும் சக்தியை நம் உடலுக்குப் பழக்குவதற்குத்தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மனித உடலுக்கே கிருமியை அழிக்கும் சக்தி இருந்தால், ஏன் சிக்கன் குன்யா போன்ற நோய்கள் வருகின்றன எனும் சந்தேகம் உங்கள் மனதில் தோன்றும். அதற்குக் காரணம், சிறு வயதில் நம் உடலில் ஐந்து விஷயங்கள் ஒழுங்காக இருக்கின்றன. இப்பொழுது அந்த ஐந்தில் ஒன்றோ இரண்டோ ஒழுங்காக இல்லை என்பதால்தான்.

பொதுவாக, தடுப்பூசிகள் குழந்தைப் பருவத்தில் மட்டுமே செலுத்தப்படுகின்றன. பெரியவர்களுக்கு இல்லை. அதற்கும் இதுதான் காரணம். பிறந்த குழந்தைக்கு உடலில் ஐந்து விஷயங்கள் ஒழுங்காக இருக்கும். வயதாக வயதாக நம்மிடம் ஏற்படும் கெட்ட பழக்க வழக்கங்களால் அந்த ஐந்தில் ஒன்றோ இரண்டோ கெட்டு விடும். நம் உடலில் அந்த ஐந்து விஷயங்கள் ஒழுங்காக இருக்கும்பொழுது மட்டுமே நோய்க்கிருமியை உடல் அறிவு அழிக்க முடியும்.

அந்த ஐந்து விஷயங்கள் என்ன எனப் பார்க்கலாம்.

உடலை அம்மாவாகவும், இரத்தத்தைச் சமையலறையாகவும், இரத்தத்தில் உள்ள பொருட்களைச் சமையல் அறையில் உள்ள பொருட்களாகவும், ரசத்தை ஒரு கிருமிக்கான மருந்தாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்! சமையலறையில் ரசத்திற்குத் தேவையான ஒரு பொருள் கெட்டுப்போன பொருளாக இருந்தால் அதை வைத்து ரசம் செய்யும்பொழுது அதை நாம் சாப்பிட முடியாது. அதுபோல, ஒருவருக்கு ஒரு கிருமி உடலில் நுழையும்பொழுது அதை அழிக்கத் தயாரிக்கும் மருந்துக்குத் தேவையான ஒரு பொருள் நமது இரத்தத்தில் கெட்டுப்போய் இருந்தால் அந்த மருந்து சரியாக வேலை செய்வதில்லை. இதனால், அந்தக் கிருமியை அழிக்க முடியாமல் நோய் வருகிறது. இது முதலாவது காரணம்.

காரணம் இரண்டு. ஒருவேளை, சமையலறையில் ரசம் தயாரிக்க ஒரு பொருள் இல்லை என்று வைத்துக் கொள்வோம். அது இல்லாமல் ரசம் வைத்தால் அதை யாரும் சாப்பிட முடியாது. அதேபோல், இரத்தத்தில் கிருமியை அழிக்க தயாரிக்கும் மருந்துக்குத் தேவையான ஏதாவது ஒரு பொருள் இல்லாமல் இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அந்த மருந்தைத் தயாரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் நோய் ஏற்படுகிறது.

மூன்றாவது காரணம். ஒவ்வொரு மனிதனுடைய உயரம், எடை, வயதுக்கு ஏற்ப உடலில் இரத்தம் இருக்க வேண்டும். அதன் அளவு குறையும்பொழுது நோய்க்கிருமிகளுக்கு எதிரான போராட்டத்தை நம் உடல் செய்யாது.

நான்காவது காரணம். நமது மனம் கெட்டுப்போவது. நம் மனதுக்கும், உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நம் மனம் எதைப் பற்றி யோசிக்கிறதோ, உடல் அதைச் செய்யும். நோய்க்கிருமியால் ஒரு காய்ச்சல் வந்தவுடன் நமது மனம் ‘நமக்கு நோய் வந்து விட்டது. பயமாக இருக்கிறது. இதை மருந்து, மாத்திரையால்தான் குணப்படுத்த முடியும்’ என்று நினைத்தால், உடல் உங்கள் நோயைக் குணப்படுத்தாது. ‘என் உடலுக்கு அறிவுள்ளது. அது கண்டிப்பாக நோயைக் குணப்படுத்தும்’ என்று மனதில் பயமில்லாமல் தைரியமாக இருந்தால் மட்டுமே நம் உடலால் நோயைக் குணப்படுத்த முடியும். நீங்கள் பார்த்திருக்கலாம், பலர் பல நோய்களுக்கு எந்த ஒரு சிகிச்சையும் செய்ய மாட்டார்கள். ஆனால், ஆரோக்கியமாக இருப்பார்கள். இதற்குக் காரணம் அவர்களின் மனத்திண்மையே!

மனம்தான் நம் உடலில் பல உறுப்புகளை வேலை செய்ய வைக்கின்றது. உதாரணமாக, ஓர் உணவைச் சாப்பிட்டுச் சந்தோஷமாக அமர்ந்திருக்கும்போது அந்த உணவில் பல்லி விழுந்து விட்டது என்று யாராவது சொன்னால் அடுத்த வினாடி வாந்தி வருகிறது. உணவில் பல்லி விழுந்தது தெரியாத வரை ஜீரணம் செய்து கொண்டிருந்த வயிறு இப்போது ஏன் வாந்தி எடுத்தது? இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, மனம் நினைத்தால் ஜீரணம் செய்யும் வயிற்றையும் நிறுத்தி வாந்தி எடுக்க வைக்கும்! எனவே, ஒரு நோய் வந்தவுடன் மனதில் பயம் ஏற்பட்டால் அந்த நோயை உடல் குணப்படுத்தாது. இது நான்காவது காரணம்.

நம் உடலில் அறிவு உள்ளது என்றும், அந்த அறிவுதான் நோய்க்கிருமியை அழிக்கிறது என்றும் பார்த்தோம். அந்த அறிவும் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது. அப்பொழுதும் நமக்குக் கிருமியால் நோய் வரும். இது ஐந்தாவது காரணம்.

ஆக, கிருமியால் உடலுக்கு நோய் வருவதில்லை. நம் இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப்போவதால், ஒரு பொருள் இல்லாமல் போவதால் அல்லது குறைந்து போவதால், இரத்தத்தின் அளவு குறைவதால், மனம் கெட்டுப்போவதால், உடல் அறிவு கெட்டுப்போவதால் மட்டுமே நமக்கு நோய் வருகிறது. நமது சிகிச்சையில் இந்த ஐந்தையும் சரி செய்வது எப்படி என்பதை நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம். எனவே, இனி நாம் நோய்க்கிருமியை அழிப்பதற்கு மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

கிருமியால்தான் நோய் வருகிறது என்பது உண்மையானால் ஊரில் உள்ள அனைவருக்கும் ஒரே நோய் வரவேண்டும். ஆனால், உங்கள் வீட்டில் பத்து பேர் இருந்தால் எட்டு பேருக்கு வரும் நோய் இரண்டு பேருக்கு மட்டும் ஏன் வரவில்லை எனச் சற்று யோசித்துப் பாருங்கள்! அந்த இருவருக்கும் இந்த ஐந்து விஷயங்களும் ஒழுங்காக இருக்கும். எனவே, உலகிலுள்ள பலவிதமான நோய்க் கிருமிகள் பற்றி ஆராய்ச்சி செய்து, அவற்றுக்குப் பெயர் வைத்து, அந்தக் கிருமிகளைப் பெரிய மனிதர்களாக்குவதை விட்டுவிட்டு, நம் உடலில் இந்த ஐந்து விஷயங்களையும் சரியாக வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றிய சிறிய ரகசியங்களைப் புரிந்து கொண்டு அதைச் சரியாகச் செய்து விட்டால் எந்தக் கிருமியாலும் எந்த நோயும் வராது.

நோய்க்கிருமி என்றால் என்ன? அது என்ன வடிவத்தில் இருக்கும்? என்ன அளவில் இருக்கும்? இவை எதுவும் தெரியாமலே பலர் கிருமிகளுக்குப் பயப்படுகிறார்கள். கிருமிகள் நம் கண்ணுக்கே தெரியாது. பெரும்பான்மையோர், மைக்ராஸ்கோப் மூலமாகப் பார்த்தது கூடக் கிடையாது. நாம் சுவாசிக்கும் காற்றில் பல கோடிக்கணக்கான நோய்க் கிருமிகள் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. ஒவ்வொரு வினாடியும், நாம் விடும் மூச்சுக்காற்றின் வழியாகப் அந்தப் பல கோடிக்கணக்கான நோய்க் கிருமிகளையும் நாம் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.

எனவே, தயவு செய்து நோய்க்கிருமிக்குப் பயப்படாதீர்கள்! ஒரு மனிதனுக்கு மேலே கூறப்பட்ட ஐந்து விஷயங்களும் சரியாக இருந்தால் அவருக்கு எந்த நோய்க் கிருமியாலும் எந்த நோயும் வராது. அப்படி வந்தாலும் காய்ச்சல் வந்தால் என்ன செய்யவேண்டும் என்று இந்தத் தொடரில் விரிவாகக் கூறியிருப்பதைப் படித்துப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்தினால் எந்த மருந்து, மாத்திரை, மருத்துவர் உதவியும் இல்லாமலே நாம் நோய்க்கிருமிகளை வெல்ல முடியும்.

உண்மையில், பிறந்த குழந்தைக்கு மிகச்சிறந்த தடுப்பூசி தாய்ப்பால்தான். ஒரு அம்மா தன்னுடைய வாழ்நாளிலும், தன் பரம்பரையிலும் வந்த அனைத்து நோய்களையும் எப்படிக் குணப்படுத்தினார் என்கிற ரகசிய பார்முலாவைத் தாய்ப்பால் வழியாகத் தன் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்கிறார். பிறந்த குழந்தைக்கு முதல் 3இலிருந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வேறு எந்தத் தடுப்பூசியும், மருந்து மாத்திரையும் கொடுக்காமல் வளர்த்தால் உலகிலேயே அந்தக் குழந்தைபோல் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குழந்தை வேறு இருக்காது.

இப்படி, பிறந்த குழந்தைக்குத் தடுப்பூசி எனும் பெயரில் ஒரு நோய்க் கிருமியை உள்ளே அனுப்பும்பொழுது அந்தக் குழந்தையின் உடல் தாய்ப்பாலின் மூலமாக வரும் பல கோடிக்கணக்கான அறிவைச் சேர்த்து வைக்காமல் இந்தத் தடுப்பூசியில் உள்ள நோய்க்கிருமியைப் பார்த்துப் பயந்து அதற்குச் சிகிச்சை அளிப்பதற்கு வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இதனால், அந்த ஒரு நோய்க்கான மருந்தைத் தயாரிக்கும் அறிவு மட்டும் உடலுக்கு ஏற்படும். வேறு நோய் வரும்பொழுது பயப்பட ஆரம்பிக்கும். எனவே, குழந்தைகளுக்குத் தடுப்பூசி கொடுப்பது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்குமே தவிர அதிகப்படுத்தாது!

தடுப்பூசி என்றால் என்ன, தடுப்பூசி எப்படி உருவாயிற்று, பல நூற்றாண்டுகளாக இந்தத் தடுப்பூசி எந்தெந்த நாடுகளில் பயன்படுத்தப்பட்டது, எந்தெந்த நாடுகளில் எத்தனை மக்கள் உயிரிழந்தார்கள், தடுப்பூசியைத் தடை செய்வதற்கு ராயல் கமிஷன் ஆப் இந்தியா என்ற ஓர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது எப்பொழுது, இப்பொழுது தடுப்பூசியின் நிலை என்ன என்பவற்றையெல்லாம் சொல்லும் தமிழ்வாணன் ஐயா எழுதிய ‘இயற்கை வைத்தியம்’ புத்தகத்தைத் தயவு செய்து படித்துப் பாருங்கள்! அதில் முதல் 200 பக்கங்களில் தடுப்பூசி பற்றித் தெளிவாகக் கூறியிருப்பார்.

உடல் நோய்க் கிருமியைப் பார்த்த அடுத்த வினாடி ஹெல்பர், கில்லர், சப்ரசர், மெமரி என்கிற நான்கு காரியத்தைச் செய்யும். ஹெல்பர் என்றால் சளி. முதலில், சளியை உண்டு செய்து அந்த நோய்க் கிருமியை வெளியேற்றும். சளி என்பது நோய்க் கிருமியை வெளியேற்றும் ஒரு வாகனம். எனவேதான், தண்ணீரை மாற்றிக் குடிக்கும்பொழுது சளி பிடிக்கிறது. இது ஏன் என்பதைத் ‘தண்ணீர் அருந்தும் முறை’ என்கிற தலைப்பின் கீழ் இந்தத் தொடரில் தெளிவாகப் பார்க்க உள்ளோம். கிருமி சளியால் வெளியே போய்விட்டால் அத்துடன் உடல் சமாதானம் அடைகிறது. ஆனால், சில நோய்க்கிருமிகள் சளியால் வெளியே செல்லாமல் சளியை இழுத்துக்கொண்டு உடலுக்குள் செல்ல ஆரம்பித்துவிடும். அப்பொழுது கில்லர் என்கிற ஒரு மருந்தை நம் உடல் தயார் செய்து அந்த நோய்க்கிருமியை அழிக்கிறது. இந்தக் கில்லர் என்கிற மருந்து ஒரு வகைப் புரதம். இது கிருமியை அழித்த உடன் அந்தக் கில்லர் மருந்தை அழிப்பதற்காக சப்ரசர் என்கிற மருந்தை உடல் அனுப்புகிறது. இந்த சப்ரசர் கில்லரை வீரியமிழக்கச் செய்யும். நான்காவதாக, நம் உடலில் உள்ள செல்களில் "நான் ஒரு நோய்க் கிருமியைப் பார்த்தேன். அதன் வீரியம் இவ்வளவு; அதை அழிக்க நான் இந்த மருந்துகளை அனுப்பினேன், அதன் மூலமாக அந்தக் கிருமி இறந்து விட்டது. சக்ஸஸ்!" என்று அந்த பார்முலாவைப் பதிவு செய்வது மெமரி.

ஒவ்வொரு நோய்க்கிருமியும் உடலுக்குள் போகும்பொழுது இந்த நான்கு முறைகளில் நமது உடல் அறிவு வேலை செய்து அவற்றை அழிக்கிறது!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author