அனாடமிக் தெரபி (9) – சுகப்பிரசவம்

சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்?

எல்லாரும்தான் கர்ப்பம் ஆகிறார்கள், மருத்துவமனைக்குச் செல்கிறார்கள், ஸ்கேன் எடுக்கிறார்கள், மருந்து மாத்திரை சாப்பிடுகிறார்கள், வாக்கிங் செல்கிறார்கள். எல்லாம் செய்த பிறகும் ஏன் குழந்தை ஊனமாகப் பிறக்கிறது அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது? இதுவரை யாராவது உங்கள் மருத்துவரிடம் சென்று, "கர்ப்பம் தரித்த நாளிலிருந்து பிரசவம் வரைக்கும் உங்களிடம்தான் வந்தேன். நீங்கள் கூறிய அனைத்தும் செய்தேன். அனைத்து மருந்து மாத்திரைகளையும் சாப்பிட்டேன். பிறகு, ஏன் எனக்கு சிசேரியன் நடந்தது அல்லது ஊனமான குழந்தை பிறந்தது" என்று கேட்டீர்களா? கடந்த வாரம் சொன்ன அந்த ஐந்து விஷயங்களைப் பற்றித் தெரியாத எந்தவொரு மருத்துவராலும் சுகப் பிரசவம் நடக்கச் செய்ய முடியாது. மருத்துவர் மட்டும் அவற்றைத் தெரிந்திருந்தால் போதாது. குழந்தை பெற்றுக் கொள்ளும் அம்மாவுக்கும் இந்த ஐந்து விஷயங்களில் அறிவு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குச் சுகப்பிரசவம் கண்டிப்பாக நடக்கும்.

எனவே, இனி தாய்மார்களாகிய நீங்கள் அந்த ஐந்தையும் எப்படி ஒழுங்காக வைத்து கொள்வது என்பதைத் தெரிந்து கொண்டு கடைப்பிடித்தால் ஸ்கேன் ஏதும் எடுக்காமல், எந்தவொரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல், மருத்துவரையும் சந்திக்காமல் கண்டிப்பாக நீங்கள் வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் அழகான, ஊனமில்லாத குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இருதய ஓட்டையை அடைப்பது எப்படி?

ஒரு அம்மா ஐந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார். அப்படியானால் என்ன அர்த்தம்? ஒரு தாய் தன் உடலறிவைக் கொண்டு ஐந்து புது இருதயங்கள் செய்து கொடுக்கிறாள். ஐந்து கல்லீரல், பத்து கிட்னி, பத்து கண்கள் செய்து கொடுக்கிறாள். அதே தாய்க்கு இருதயத்தில் ஓட்டையென்று வைத்துக் கொளவோம். மருத்துவர், "திடீரென்று ஓட்டை வந்துவிட்டது. இதை ஆறு மாதத்தில் அடைக்க வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து" என்று கூறுகிறாரே, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! புதிதாக ஐந்து இதயத்தை உருவாக்கிக் கொடுக்க அறிவு இருக்கும் உடலுக்கு அதே உடலிலுள்ள இதய ஓட்டையை அடைக்கத் தெரியாதா?

சில விஷயங்களைச் சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஆனால் உண்மை! இதய ஓட்டை என்ற நோய் இதயம் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. இதய ஓட்டையை அடைப்பதற்கு உடலுக்கே தெரியும். அதற்குச் சில தடைகள் உள்ளன. அந்தத் தடைகளைக் கண்டறிந்து சரி செய்தால் எந்தவொரு மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சை இல்லாமலே கூட இதய ஓட்டையை அடைக்க முடியும். அந்தத் தடைகள் வேறொன்றுமில்லை, போன வாரம் நாம் பார்த்த அதே ஐந்து காரணங்கள்தான்.

1. இரத்தத்தில் இதய ஓட்டையை அடைப்பதற்குத் தேவையான ஒரு பொருள் கெட்டுப் போயிருத்தல்.

2. இரத்தத்தில் ஓட்டையை அடைப்பதற்குத் தேவையான ஒரு பொருள் இல்லாமல் இருத்தல் அல்லது குறைவாக இருத்தல்.

3. உடம்பில் இரத்தத்தின் அளவு குறைவாக இருத்தல்.

4. நம் மனம் கெட்டுப் போயிருத்தல்.

5. உடலறிவு கெட்டுப் போயிருத்தல்.

(இந்த ஐந்து காரணங்கள் பற்றிய விரிவான விளக்கத்தைக் கடந்த இதழில் படித்து அறியலாம்).

நமது சிகிச்சையில், படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் இந்த ஐந்தையும் ஒழுங்காக வைத்துக் கொள்வது எப்படியென்பதைச் சுலபமாகக் கற்றுக்கொள்ளப் போகிறோம். அப்படிக் கற்றுக்கொள்பவர்கள் எந்த மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சையும் இல்லாமல், மருத்துவர் உதவி இல்லாமல் நமது இருதய ஓட்டையை நாமே அடைத்து கொள்ளலாம்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்...

About The Author