குறுங்கவிதைகள் (9)

அத்துமீறல்

ஏரிக்குள் வீடுகள்

புகுந்தது வெள்ளம்

*****

கனவு

கண்டவன்

சுயம்செத்துப் போனவன்

*****

பறவைகள்

போய்விட்டன

இலைக்கண்ணீர்

உதிர்த்தன மரங்கள்

*****

நின்று கொண்டிருந்தன

வெட்டி

நாற்காலி செய்கிறேன்

*****

பறவைகளைக்

கல்லெடுத்து எறிந்தான்

கல் வெட்கப்பட்டு

தரையிறங்கியது ஆவேசமாய்

*****

About The Author