சினி சிப்ஸ் – கொறிக்க, சுவைக்க (19)

படத்தி‎‎ன் தலைப்பில் எம்.ஜி.ஆர் கார் நம்பர்

நானா படேகர் மற்றும் ஜான் ஆப்ரஹாம் நடித்த ‘டாக்ஸி நம்பர் 9211’ படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது. பசுபதி, ‘அஞ்சாதே’ புகழ் அஜ்மல், சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘தநா – 07 அல 4777’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் கார் நம்பர் ‏எ‎ன்பது குறிப்பிடத்தக்க செய்தி.

விளம்பரத்திற்காக ஸ்பெஷல் பாட்டு

‘பொய் சொல்லப் போறோம்’ படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், விளம்பரத்திற்காக ஓரு ஸ்பெஷல் பாட்டினைப் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ‘கிரீடம்’ விஜய். "படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லும் விதத்தில் அமைந்துள்ளது இப்பாடல். இங்கு இது வித்தியாசமான முயற்சி என்றாலும் ஹாலிவுட், பாலிவுட்களில் அதிகமாக காணலாம்." எ‎‎ன்கிறார் ‏இயக்குனர். இப்படத்தை இயக்குனர் ப்ரியதர்ஷன் தயாரிக்கிறார். ஜூலை மாதத்தில் பாடல்களின் வெளியீடும், ஆகஸ்ட் மாதத்தில் பட வெளியீடும் இருக்கும் எனத் தெரிகிறது.

நடிகர்களாகும் எழுத்தாளர்கள்

இயக்குனர் சசி தன்னுடைய ‘பூ’ படத்தில் லக்ஷ்மணப் பெருமாள், பாரதி தேவி, ஜானகி ஆகிய மூன்று எழுத்தாளர்களை நடிகர்களாக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தின் கதை தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்’ குறுநாவலை அடிப்படையாகக் கொண்டது. கிராமத்தில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதற்காக சசி இராஜபாளையத்தில் சிலகாலம் தங்கி இருக்கிறார்

ஜீவனின் ‘கிருஷ்ணலீலை’

கவிதாலயா தயாரிப்பில் இயக்குனர் செல்வன் இயக்க ஜீவன், மேக்னா நடிக்கும் படம் ‘கிருஷ்ணலீலை’. நியாயமான காரணத்திற்காக போராடும் இளைஞனைப் பற்றி கூறவருகிறது ‘கிருஷ்ணலீலை’.

லாரன்ஸிற்கு உதவ வருகிறது அரசு

30 ஏழைக் குழந்தைளின் உணவு, உடை, கல்வி போன்ற அத்தியாவசியத் தேவைகள் மட்டுமல்லாமல் அவர்களின் இருதய சிகிச்சைக்கும் பொறுப்பேற்றுள்ளார் டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ். ஏழு குழந்தைகளின் சிகிச்சைக்காக இவர் செய்த செலவைக் கண்டு அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்ற குழந்தைகளின் இருதய சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்துள்ளார்.

ப்லிம் பெஸ்டிவலில் ‘தூவானம்’

ஆசியா மற்றும் அரேபிய ஓஷியன் சினிபேன் பிலிம் பெஸ்டிவலில் ஜூலை 10ஆம் ‘தூவானம்’ திரைப்படம் திரையிடப்படுகிறது. "இது எங்களின் கடின உழைப்பிற்குக் கிடைத்த பரிசு. எதிர்காலத்தில் இது போன்ற பல திரைப்படங்கள் வெளிவர உற்சாகப்படுத்துவதாக உள்ளது." என்று கூறியுள்ளார் இயக்குனர் ஹரிசரண்.

மத்திய அரசின் வாழ்நாள் விருதுகள்

இந்தியாவின் 60ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டத்தில் மத்திய அரசு சினிமா துறையைச் சேர்ந்த நான்கு பேரை கவுரவிக்கவிருக்கிறது. சரோஜா தேவி, திலீப் குமார், லதா மங்கேஷ்கர் மற்றும் இயக்குனர் தபன் சின்ஹா ஆகியோர் வாழ்நாள் விருது பெறவிருக்கின்றனர்.

About The Author