சினி சிப்ஸ் – கொறிக்க, சுவைக்க (12)

”ஸ்வராலயா’ விருது பெரும் பி. சுசீலா

இந்த ஆண்டிற்கான ஸ்வராலயா-கே.பி.ஏ.சி சுலோச்சனா விருதைப் பின்னணிப் பாடகி பி.சுசீலா பெறுகிறார். தென்னிந்தியத் திரைப்படப் பாடல்களின் வளர்ச்சிக்காக அவராற்றிய பணியினைப் பாராட்டி இவ்விருதினை வழங்குகின்றனர்.

*****

‘குசேலன்’ நியூஸ்

குசேலன் திரைப்படத்திற்காக ரஜினி தோன்றும் பாடல் ஒன்றிற்கு ராகவா லாரன்ஸ் நடனம் அமைத்துள்ளார். அப்பாடலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ப்லிம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. பிரமிட் சாய்மீரா நிறுவனம் இப்படத்தின் விநியோக உரிமையை 65 கோடி ரூபாய்க்குப் பெற்றுள்ளது.

*****

மிகுந்த எதிர்பார்ப்புடன் ‘குருவி’

விஜய்யின் ‘குருவி’ மே 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. 250 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ள குருவி, கர்நாடகாவில் மட்டும் ஒரு கோடியே 20 லட்சத்திற்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

*****

குறும்படத்தில் ஜோதிகா

நடிகர் சூர்யாவின் ‘அகரம்’ அற நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கல்வி இலாகா இரண்டும் இணைந்து தயாரிக்கும் குறும்படத்தில் ஜோதிகா நடிக்கிறார். படத்தின் இயக்குனர் வி.ப்ரியா. ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த். இப்படத்தின் மூலம் பெண் குழந்தைகள் கல்வி பயில வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.

*****

ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஓரு நாள்

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது – ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘அதா’ ஹிந்திப் படத்தின் 2 பாடல்களை ரீமிக்ஸ் செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு www.nokia.co.in/XpressMusic தளத்தினை அணுகலாம்.

*****

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘பில்லா’

கேன்ஸ் திரைப்பட விழாவில், அஜீத் நடித்த ‘பில்லா’ திரைப்படத்தைப் பன்மொழிப் படங்கள் வரிசையில் திரையிடுகின்றனர். விழாவில் கலந்து கொள்வதற்காக இயக்குனர் விஷ்ணுவர்தன், தயாரிப்பாளர் ஆனந்த சுரேஷ் செல்கின்றனர்.

*****

சங்கர் படத்தில் இயக்குனர் சிகரமும் இயக்குனர் இமயமும்

குழந்தைகளுக்காக சங்கர் தயாரிக்கும் படத்தை அவருடைய உதவி இயக்குனர் இயக்குகிறார். இப்படத்தில் இயக்குனர்கள் கே. பாலசந்தர் மற்றும் பாரதிராஜா நடிப்பது குறிப்பிடத்தக்கது.

*****

மீண்டும் சிம்ரன்

ஹரியின் இயக்கத்தில் பரத் மற்றும் பூனம் பஜ்வா நடிக்கும் படம் ‘சேவல்’. தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் சிம்ரன் நடிக்கிறார். கேரளா மற்றும் அம்பாசமுத்திரத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

*****

About The Author