சினி சிப்ஸ் – கொறிக்க, சுவைக்க (2)

ஆசை யாரை விட்டது?

கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார் அதன் முன்னாள் மாணவரும் நடிகருமான நடிகர் விஜய். விழாவில் நடிகர் ரஜினி குழந்தைகளுடன் நடித்த ‘ராஜா சின்ன ரோஜா’ திரைப்படத்தின் ரீ-மேக்கில் நடிக்க விருப்பமுள்ளதாக தெரிவித்தார். ஏற்கெனவே ரஜினியின் மற்றொரு படமான ‘முரட்டுக்காளை’யில் அவர் நடிக்க விரும்புவது நாம் அனைவரும் அறிந்ததே.

*****

வசந்தின் இலக்கிய ஆர்வம்

எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் ‘தக்கையின் மீது நாலு கண்கள்’ சிறுகதையை குறும்படமாக எடுத்ததன் மூலம் இயக்குனர் வசந்த்தின் இலக்கியப்பற்று வெளியானதுப்பற்றை. எழுத்தாளரின் மற்றுமொரு நாவலான ‘சாயவனம்’, மேலும் எழுத்தாளர் அசோகமித்ரனின ‘தண்ணீர்’ ஆகியவற்றைத் திரைப்படமாக்கும் உரிமையைப் பெற்றுள்ளார். விரைவில் நல்ல இலக்கியத் திரைப்படங்களை வசந்திடமிருந்து எதிர்பார்க்கலாம்.

*****

த்ரிஷாவால் விமான அலுவல்கள் அம்பேல்!

இயக்குனர் ராதாமோகனின் ‘அபியும் நானும்’ திரைப்படத்திற்காக கடந்த வாரம் சென்னை விமான நிலையத்தில் நடிகை த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கப்பட்டது. பார்வையாளர்களுடன் விமான ஊழியர்களும் ஷூட்டிங்கைப் பார்த்ததால் விமான அலுவல்கள் சில மணிநேரம் தடைப்பட்டது.

*****

சுசி.கணேசனின் ஸ்பானிஷ் திரைப்படம்

கந்தசாமி திரைப்படத்தின் ஷூட்டிங்கிற்காக மெக்சிகோ சென்றனர் இயக்குனர் சுசி.கணேசன், நடிகர் விக்ரம் மற்றும் படக்குழுவினர். படத்தின் டிரெய்லரைப் பார்த்து ரசித்த அதிகாரிகள் இயக்குனர், நடிகர் மற்றும் படக்குழுவினரைக் கொண்டு ஸ்பானிஷ் படம் ஒன்று தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் மெக்சிகோ நடிகர், நடிகைகளும் இடம் பெறுவர்.

*****

பல போராட்டங்களுக்குப் பிறகு ‘நான் கடவுள்’

இயக்குனர் பாலா தன்னுடைய ‘நான் கடவுள்’ படத்திற்காக நீண்ட நாள் படப்பிடிப்பு (200 நாட்கள்) நடத்தியவர் என்ற சாதனை படைத்துள்ளார். மார்ச் இறுதியில் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் ஆர்யாவிற்கு திருப்புமுனையாக அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

*****

முயற்சி மெய் வருத்தக் கூலி தரும்

ரமணா மற்றும் கஜினி திரைப்படங்களுக்காக தமிழக அரசின் விருதினைப் பெற்ற இயக்குனர் முருகதாஸ், தெலுங்கில் சிரஞ்சீவி, த்ரிஷா நடித்த ‘ஸ்டாலின்’ திரைப்படத்திற்காக, ஆந்திர அரசின் ‘நந்தி’ விருதைப் பெற்றுள்ளார்.

*****

ஒரே உறையில ரெண்டு கத்தி

பிரபுதேவா இரண்டு கதாநாயர்கள் கொண்டகதையை இயக்கவுள்ளார். இதில் சிம்புவும், தனுஷும் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

*****

ஆச்சியின் நீண்ட நாள் ஆசை

‘ஜான்’ திரைப்படத்தில் ஆச்சி மனோரமா அவர்கள் அரவாணியாக நடித்துள்ளார். 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புரிந்திருந்தாலும், இப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற அவருடைய நீண்ட நாள் ஆசை இப்போது தான் நிறைவேறியுள்ளது.

*****

About The Author