ஜோதிடம் கேளுங்கள்

1. 11.08.2011 – அன்று 11.15 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. என்ன பெயர் வைக்கலாம்? குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும்? – எம். மூர்த்தி, திருவாரூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் மூர்த்தி அவர்களே!

11.08.2011 அன்று காலை 11.15க்கு பிறந்த பெண் குழந்தைக்கான நட்சத்திரம், பூராடம் 4-ம் பாதம், ராசி தனுசு, லக்னம் துலாம். குழந்தைக்கு ஆங்கில எழுத்தான B.D ஆகியவற்றில் துவங்கும் பெயரை வைக்க்கலாம். குழந்தையின்நட்சத்திரம் மற்றும் லக்னாதிபதி இருவரும் சுக்ரனின் சாரம் பெற்றுள்ளதால், கலைகளில் ஆர்வம் உள்ள குழந்தையாகத் திகழ்வாள்.அத்துடன் குருவும் நல்ல இடத்தில் உள்ளதால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

****************

2. நான் எப்படி படிப்பேன்? 12 ம் வகுப்பில் என்ன மார்க் வாங்குவேன்? ஸயிண்டிஸ்ட ஆக விரும்பும் என் ஆசை நிறைவேறுமா? – கிரி, தேனி.

அன்பு நிலாச்சாரல் வாசகர் கிரி அவர்களே!

11 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அவிட்டம், ராசி கும்பம். லக்னம் கடகம் . கடக லக்னத்தை சேர்ந்த தாங்கள் வீண் மனக்குழப்பம், பயம் ஆகியவற்றிற்கு இடம் தராமல் படித்தால், 80-90% மதிப்பெண் பெறலாம். தங்களின் ஜாதகப்படி விஞ்ஞானம் சார்ந்த துறையில் பிரகாசிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நல்ல கல்விச் செல்வம் பெற நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்:

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A. சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author