அனாடமிக் தெரபி (14) -கல்லீரல்

கல்லீரலில் வரும் நோய்களுக்குக் காரணம் என்ன?

நாம் சாப்பிடும் உணவு வாயில் ஜீரணமாகி, வயிற்றில் ஜீரணமாகிச் சிறுகுடலுக்குச் செல்கிறது. சிறுகுடலும் வயிற்றைப் போல் ஒரு ஜீரண உறுப்புதான். சிறுகுடலில் ஜீரணமான சத்துப் பொருட்களை ‘உணவு உறிஞ்சிகள்’ எனும் உறுப்புகள் உறிஞ்சிக் கல்லீரலுக்குக் கொடுக்கின்றன. கல்லீரல் என்கிற இரயில்வே ஸ்டேஷனில் இரத்தம் என்கிற இரயில் வரும்பொழுது சத்துப் பொருட்கள் அதில் ஏறுகின்றன. இரத்தம் வழியாக உடலிலுள்ள அனைத்து உறுப்புகளிலுமுள்ள செல்களுக்கும் சத்துக்கள் செல்கின்றன. செல்கள் சத்துப் பொருட்களை பயன்படுத்திய பின், அவை கழிவுப்பொருளாக மாறுகின்றன. கழிவுப்பொருள் மீண்டும் இரத்தத்துக்கு வருகிறது. கல்லீரல், இரத்தத்திலுள்ள கழிவுகளைக் கழிவு நீக்கும் மண்டலம் மூலமாக வெளியேற்றுகிறது.

இப்படி, உடலிலுள்ள அனைத்துச் செல்களுக்கும் உணவு கொடுக்கும் அம்மாதான் கல்லீரல். ஒரு தாய், தன் குழந்தைக்கு உணவை ஊட்டி விடுகிறார். அதே சமயம், கழிவுகளையும் நீக்குகிறார். அதே போல்தான் கல்லீரலின் வேலையும். எனவே, எத்தனை செல்கள் உணவு வேண்டும் எனக் கேட்கின்றனவோ கல்லீரல் அவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும். கல்லீரலில் ஒரு நோய் வந்தால் அது கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. உடலில் எத்தனை ஆயிரம் செல்களுக்கு உணவு சம்பந்தப்பட்ட நோய் வருகிறதோ அதன் பிரதிபலிப்பு கல்லீரலில் தெரியும். எனவே, கல்லீரலில் நோய் இருக்கிறது எனக் கணித்துக் அதற்குச் சிகிச்சை அளிப்பதும் கல்லீரலில் ஆப்ரேஷன் செய்வதும் சரியான வைத்திய முறைகளே அல்ல!

தலை முடி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்துச் செல்களுக்கும் சரியான உணவு கொடுத்து நோய்களைக் குணப்படுத்துவது மூலமாக மட்டுமே கல்லீரல் நோயைக் குணப்படுத்த முடியும் என்பதே உண்மை!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்

–அடுத்த அமர்வில் சந்திப்போம்..
.

About The Author