அனாடமிக் தெரபி (35)

அனைத்து நோய்களுக்கான காரணம் ஐந்து :

நோய்கள் மொத்தம் இரண்டு வகைப்படும்

1. உடலில் உள்ளே இருந்து வரும்நோய்கள்
2. வெளியில் இருந்து ஏதேனும்பொருளால் ஏற்படும் நோய்கள்

இரண்டாவதுவகை நோய்க்கு நாம் கண்டிப்பாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருந்து மாத்திரைசாப்பிட வேண்டும். தேவைப்பட்டால் ஆபரேசன் செய்ய வேண்டும். ஆனால் முதல்வகை நோய்க்கு எந்த மருத்துவரும் இல்லாமல் சுலபமாக குணப்படுத்த முடியும்.

ஏனென்றால், அதற்கான காரணம் மொத்தம் ஐந்து.

1. இரத்தத்தில் உள்ள பொருள்களின் தரம் குறைவது.
2. இரத்தத்தில் உள்ள பொருளின் அளவு குறைவது அல்லது இல்லாமல் போவது.
3. இரத்தத்தின் அளவு குறைவது.
4. மனதில் ஏற்படும் பாதிப்புகள்.
5. உடலில் உள்ள உறுப்புகளுக்கும் செல்களுக்கும் அறிவு கெட்டுப்போகுதல்.

இந்த ஐந்தும்தான் நோய்களுக்கான அடிப்படை காரணம். இதைப்பற்றி நாம்
தெளிவாக பார்த்து புரிந்து கொண்டோம்.

சிலருக்குச் சரியாக புரியவில்லை என்றால் இந்த உதாரணத்தின் மூலமாகத்
தெளிவாக்கிக் கொள்ளலாம்.

விபத்தில்சிக்கும்ஒருவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கிறோம். அங்குகுறிப்பிட்டரத்தவகையைச்சொல்லிநான்கு பாட்டில் இரத்தம் வாங்கி வாருங்கள் என்றுநம்மை அனுப்புவார்கள். இரத்தத்தின் அளவு உடலில் குறைவதுநோய் என்று பார்த்தோம். இது முக்கியமான நோய்என்பதால், உடனடியாக அவருக்கு நான்கு பாட்டில் இரத்தம்கொடுக்கப்படுகிறது. எப்பொழுதாவது உங்கள்மனதின் அளவு குறைந்து விட்டது; செல்களுக்குஅறிவுகெட்டுவிட்டதுஎனக்கூறிஒவ்வொன்றிலும்நான்கு பாட்டில்வாங்கிவரச்சொல்வார்களா? அதைஅவ்வாறுநேரடியாக யாரும் சரி செய்யமுடியாது.

அடுத்தாக, இரத்தத்தில் எல்லா பொருள்களும் நல்ல பொருளாகஇருக்க வேண்டும்.இதை சரிசெய்வதற்குகுளுகோஸ்டப்பாவைமாட்டிசொட்டுசொட்டாகஉடலில்செலுத்துவதைக்கவனித்திருப்போம். ஆனால்எல்லாமேகுளுகோஸ்டப்பாகிடையாது. குளுகோஸ், சோடியம் குளோரைடு, பல தாது பொருள்கள் அடங்கிய கலவை என பலவகைகளில்உள்ளன.

மூன்று மாதங்களாகக் கோமாவில் இருக்கும்ஒரு நோயாளிக்கு எப்படி சிகிச்சை அளிக்கிறார்கள்?இரத்தத்தில் சொட்டுச் சொட்டாக ஒரு பொருளை மட்டும் அனுப்பும்பொழுது, எப்படி மூன்று மாதங்கள் ஒரு உயிரைக் காப்பாற்ற முடிகிறது?சில லிட்டர் திரவப்பொருள்களை இரத்தத்தில் சேர்க்கிறார்கள். அதாவது இரத்தத்தில் எல்லாப்பொருளையும் நல்ல பொருளாக அனுப்பிக் கொண்டே இருந்தால் உடலில் உள்ளஅனைத்து செல்களுக்கும் இரத்தம் மூலமாகச் சென்று, அந்த உறுப்புகளும் செல்களும்அந்தப் பொருளைச் சாப்பிட்டு தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும்.

அதாவது இரத்தத்தில் எல்லாபொருளையும் நல்ல பொருளாக தேவையான அளவு வைப்பதுதான் சிகிக்சை.இப்படி வைத்தால் உடலில் உள்ள தனித்தனி உறுப்புகளுக்குத் தனித்தனியாக சிகிச்சைசெய்ய வேண்டிய அவசியமில்லை. எல்லா உறுப்பும் தன்னைத்தானேகுணப்படுத்திக்கொள்ளும்.

கால் மூட்டில் வலி ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்கிறோம். இரத்தத்தில் எந்தப் பொருள்கெட்டுப்போனால் அல்லது இல்லாமல் போனால் மூட்டு வலி வரும் என்பதைக்கண்டு பிடித்த விஞ்ஞானிகள் அந்தப் பொருட்களை மருந்து முலமாக சரி செய்கிறார்கள்.
எனவேமூட்டுவலி என்பது மூட்டு சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, இரத்தத்தில் ஒருபொருள் கெட்டுப்போனாலோ அல்லது இல்லாமல் போனாலோ ஏற்படும் நோய்என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அதேபோல் கண் வலி என்பது கண்சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. கண் சாப்பிடும் ஒரு பொருள் இரத்தத்தில்கெட்டுப்போய்விட்டது அல்லது இல்லாமல் போய்விட்டது. எனவே நோய்இரத்தத்தில் தான், கண்ணில் இல்லை என்பதைப்புரிந்துகொள்ளவேண்டும்.

காதில் வலி ஏற்பட்டால் வாயில் ஏன் மாத்திரை சாப்பிடவேண்டும்? வாயில் சாப்பிடும் மாத்திரை வயிற்றில் ஜீரணமாகி இரத்தத்தில் கலந்து அதுகாதின் அருகே செல்லும். காது அந்தப் பொருளை எடுத்துக் கொண்டு தன்னைக்குணப்படுத்திக்கொள்கிறது. எனவே காது வலி என்ற நோய் காது சம்பந்தப்பட்டநோயே கிடையாது. அது இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப்போவதனாலோஅல்லதுஇல்லாமல் போவதாலோஏற்படும் நோய் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.எனவே உடலில் எந்த உறுப்பிலும் எந்த நோய், வலி, வேதனை வந்தாலும் அந்தஉறுப்பு காரணம் அல்ல. இரத்தத்தில்தான் நோய். அதிலும் மேலே கூறப்பட்டுள்ளஇந்த ஐந்து காரணங்கள்தான் நோய் என்பதை மீண்டும் மீண்டும் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.

இனிமேல் யார் எந்த நோயைப் பற்றிக் கூறினாலும். நாம் அந்த நோய்க்குச்சரியான காரணத்தைக் கூறமுடியும். உதாரணமாக முடி கொட்டுதல் என்பது எதனால்ஏற்படுகிறது என்று யாராவது கேட்டால் முடிக்குத் தேவையான ஒரு பொருள்இரத்தத்தில் கெட்டுவிட்டது, முடிக்கு தேவையான ஒரு பொருள் இரத்தத்தில்குறைந்துவிட்டது, முடி கொட்டுகிறது என்றுமனது கெட்டுப்போய் விட்டது அல்லது முடியைப் புதுப்பிக்கும் அறிவு உடம்பில்கெட்டுவிட்டது என்று காரணங்களைக் கூறுங்கள். இதே போல் கழுத்து, காது,மூக்கு, கிட்னி, இருதயம், நுரையீரல் ஆகிய எந்த உறுப்பில் எந்த நோய் என்றாலும்முதலில் அந்த உறுப்பில் நோய் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.இரண்டாவது இந்த ஐந்து காரணங்களையும் கூறிப் பாருங்கள். மிகவும் பொருத்தமாக
இருக்கும்.

எனவே முடி கொட்டுதல், வெள்ளை முடி, கண் சம்பந்தமான கிட்டப்பார்வை,
தூரப்பார்வை, குளுக்கோமா, கண்ணில் புரை, நீர்வழிதல், காது சம்பந்தப்பட்ட வலி,வேதனை, மூக்கு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும், வாய் சம்பந்தப்பட்டஅனைத்து நோய்களுக்கும் பல் சம்பந்தப்பட்ட, நாக்கு சம்பந்தப்பட்ட, உணவு குழாய்சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இந்த ஐந்து காரணம்தான் உண்மை என்பதைப்புரிந்து கொள்ளுங்கள்.

இருதய வால்வு விரிதல், சுருங்குதல்,ஓட்டைவிழுதல் கொழுப்புக் கட்டி அடைப்பு, ஆகிய அனைத்திற்கும் இந்தஐந்துகாரணங்களே. நுரையீரல் சம்பந்தப்பட்ட ஆஸ்துமா, மூச்சடைப்பு, நெஞ்சுசளி,இருமல், சளி, மூக்கு ஒழுகுதல், தும்மல் ஆகிய அனைத்திற்கும் இந்தஐந்து காரணங்களே,வயிறு சம்பந்தப்பட்ட அஜீரணகோளாறு, அல்சர், இரிட்டபுள் பவுல் சின்ரோம்,கேஸ்டிரிக் டிரபிள் (வாயு தொல்லை) ஆகிய அனைத்து வயிறு சம்பந்தப்பட்டநோய்களுக்கும் வயிறு காரணம் இல்லை, இந்த ஐந்துதான் காரணம். கர்ப்பபையில்கட்டி இருக்கிறது, சிறுநீரகத்தில் கல் இருக்கிறது, பித்தப்பையில் கல் இருக்கிறது,குழந்தைகளுக்கு வரும் நோய், ஆண்மை குறைவு மலச்சிக்கல், மூட்டுவலி, முதுகுவலி,இடுப்பு வலி, தொடை வலி, கெண்டைக்கால் வலி, கணுக்கால் வலி, உள்ளங்கால்எரிதல், குத்துதல், குடைதல், மரமரப்பாக இருத்தல், நகம் உடைதல், தைராய்டு, கேன்சர், எய்ட்ஸ், தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் எக்சிமாசொறியாசிஸ், ஞாபகமறதி போன்ற அனைத்து நோய்களுக்கும் இந்த ஐந்துகாரணங்கள்தான் உண்மையே தவிர அந்த உறுப்புகளில் நோய் இல்லை என்பதை தயவுசெய்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

மேலே கூறப்பட்ட இந்த ஐந்து காரணங்கள் மிக அடிப்படைக் காரணங்களே.இதுஇல்லாமல் பல காரணங்களும்உண்டு. 6. நமது புத்தி கெட்டுப்போனாலும் நோய்ஏற்படும். 7. நமது அடிமன பதிவுகளில் உள்ள சில விஷயங்கள் நோயை உண்டுசெய்யும். 8. நமது ஆன்மாவுக்கு ஒரு சக்தி உள்ளது, அந்த சக்தி குறையும்பொழுது நோய்ஏற்படும். 9. நம் உடலைச்சுற்றி ஆரா என்ற ஒரு சக்தி ஓட்டம் இருக்கும். இதன் வீரியம்குறையும் பொழுது நோய் ஏற்படும். 10. வெளியே இருக்கும் பஞ்சபூதங்களாகிய நீர்,நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகியவற்றில் தரம் குறையும் பொழுதும்உடலுக்கு நோய் ஏற்படும். 11. பிறக்கும் பொழுதே சில உறுப்புகள் சரியாகவடிவமைக்கப்படாதாலும் உடலில் நோய்கள் ஏற்படும். 12. பரம்பரை பரம்பரையாக,டிஎன்ஏ, ஆர்என்ஏ, ஜீன்ஆகியவைமூலமாகவும் நமக்கு நோய்கள் ஏற்படும்.

இந்த 12 காரணங்களுக்கும்எப்படி நோய்வருகிறது, அதை எப்படி சரிசெய்வது என்பதை பின்னர்தெளிவாகப்பார்க்கலாம். இதுவரை படித்ததில் நாம் புரிந்து கொண்டது உள்ளிருந்து வரும்அனைத்து நோய்களுக்கும் மொத்த காரணம் ஐந்து

1. இரத்தத்தில் ஒரு பொருள்கொட்டு போவது
2. இரத்தத்தில் ஒரு பொருள் அளவு குறைந்து போவது
3. இரத்தத்தின்அளவு குறைந்து போவது
4. மனசு கெட்டு போவது
5. உடலில் உள்ள செல்களுக்குஅறிவு கெட்டு போவது.

இந்த ஐந்து காரணங்களையும் தெரிந்து கொண்டால், நீங்கள் பாதி மருத்துவர்ஆகலாம். இந்த ஐந்து காரணங்களையும்நேரவிடாமல்ஒழுங்காக வைத்து கொள்வது எப்படி என்பதைதெரிந்து கொள்வதால், நீங்கள் முழு வைத்தியர் ஆகலாம்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author